|
||||||||
இதுவரை திருக்குறள் மொழிபெயர்க்கப்படாத மொழி ஒன்றில் மொழிபெயர்க்க அழைக்கிறோம்.. |
||||||||
![]() இதுவரை திருக்குறள் மொழிபெயர்க்கப்படாத மொழி ஒன்றில் மொழிபெயர்க்க ஒருங்கிணைப்பு செய்ய செய்ய தன்னார்வலராக ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறோம்..
இதுவரை உலக அளவில் 60 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரே மொழியில் பலமுறை மொழிபெயர்த்ததைச் சேர்த்தால் 345 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவிலிருந்து நமது குழு "உலக மொழிகளில் திருக்குறள் : தொகுப்புத் திட்டம்" என்ற ஐந்து ஆண்டு ஆய்வை செய்து இதுவரை வெளிவந்த நூல்களின் ஒரு அச்சுப்பிரதியை சென்னைக்கு கொண்டுவந்து ஆவணப்படுத்தி , ஆய்வின் இறுதியில் Thirukural Translations in World Languages ( https://estore.valaitamil.com/ ) நூல் வெளியிடப்பட்டு அனைத்து விவரங்களும் 220 பக்கங்களில் , முழு வண்ணத்தில் முழுமையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்நூலை இணையத்தில் வாங்கிப் படித்து கேள்விகள் இருப்பின் அழைக்கவும், உங்கள் நாட்டில், பகுதியில், அமைப்பில் இந்நூலை அறிமுகம் செய்யவும். ஆசிரியர் குழுவினர் கலந்துகொண்டு கேள்விகளுக்கு விடையளிப்பார்கள். உலக அளவில் ஐநா சபை, யுனெசுகோ உறுப்பு நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு உலகப்பரவலாக்கள் செய்ய இன்னும் 126 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டும்.
இந்தியாவின் அலுவல் மொழிகளில் சிந்தி மொழியில் மொழிபெயர்ப்பது மட்டுமே இன்னும் மீதமுள்ளது.
திருக்குறள் பரவலாக்களில் ஆர்வம் உள்ளவர்கள், இன்னும் உலக ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களின் கவனத்திற்கு திருக்குறள் சென்று சேரவில்லையே என்று இதில் அக்கறையுடையவர்கள், தமிழுக்கு ஒரு பெரும் பங்களிப்பை செய்யும் வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் , இதில் பகிரப்பட்டுள்ள இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டிய பட்டியலை பார்வையிட்டு, உங்களுக்கு தொடர்புள்ள நாடு, மொழி ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த மொழிபெயர்ப்பை கொண்டுவர ஒருங்கிணைப்பை செய்ய முன்வாருங்கள்.
இதற்கு நீங்கள் திருக்குறள் அறிஞராக இருக்கவேண்டியதில்லை, பொருளாதாரம் செலவிடத் தேவையில்லை, பட்டியலில் உள்ள நாட்டின் தொடர்பு, மொழியின் தொடர்பு இருந்து ஆர்வம் இருந்தால் போதுமானது.
126 மொழிகளுக்கு 126 பேர் இருந்தால் இன்னும் இரண்டு நாடுகளில் செய்துமுடிக்க வழிகாட்டுதல் குழு வழிகாட்டத் தயாராக உள்ளது.
மொழிபெயர்ப்பு வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டு அந்தந்த நாடுகளில் மொழிபெயர்ப்பாளருக்கு ஏற்படும் திருக்குறள் ஐயங்களைத் தீர்க்கவும் , மொழிபெயர்ப்புகள் தரமாக தடம் மாறாமல் வெளிவரவும் , உரிய ஆங்கில, பிற மொழிகளின் நூல்களை பறித்துரைக்கவும் துணைநிற்கும்.
ஒருங்கிணைப்பாளர்கள், அந்தந்த நாட்டின் தமிழ்ச்சங்கங்கள், ஆர்வலர்கள், தமிழ்ப்பள்ளிகள், தொழில் செய்பவர்கள் , தங்களைப் புரவலராக இணைத்துக்கொண்டு ஒரு மொழிபெயர்ப்பை கொண்டுவர முன்வரலாம். இதற்கு ஆகும் செலவு மிகக்குறைவு. உதவிகள் தேவைப்படும் நிலையில் வழிகாட்ட , உதவ பல வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறை, செம்மொழி ஆய்வு நிறுவனம் உள்ளிட்டவை பெரிய அளவில் மொழிபெயர்ப்புகளை முன்னெடுக்கிறார்கள், உதவ வாய்ப்புள்ளது.
126 மொழிபெயர்ப்புகளை 2030 க்குள் செய்துமுடிக்க இலக்கு வைத்து செயல்படுவோம்.
வாருங்கள் வடம் பிடிக்க ..
ஆர்வம் உள்ள அன்பர்கள் தொடர்புகொள்ளவும்.
திருக்குறள் 2030 குழு சார்பாக,
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
தொடர்புக்கு : Thirukkural2030@gmail.com
|
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 18 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|