|
||||||||
இறகு உதிர்ந்த கிராமம் |
||||||||
ஊரே
நெட்டை சொல்லி அடிபட்ட
அப்பாவி போல
விக்கி
முகம் விறைத்தாற்போல் கிடக்கிறது.
'ஊர்'
அது என்ன செய்யும்?
யானையும் யானையும் மறியேறும்போது
சும்மாகிடந்த
தகரைப்பற்றை மிதிபடுமே, தகரைப்பற்றை
அதைப்போல
மிதிபட்டு
மிதிபட்டு
இறகுதிர்ந்த கோழியைப்போல உருக்குலைந்து
தவிக்கிறது.
நிலவு ஒழுகுகிறது.
வாயில்மண்,
எதுவும்
செஞ்செழிப்பாய்த் தொியவில்லை.
சூத்தை பிடித்து இறந்த பற்களின்
இடவு தொியுமே, இடவு
அந்தமாதிாி
மனிதர் மிதித்துத் துவைத்த தடங்கள்
மிகவும் அசிங்கமாய்
மூக்கறை போலவும்.
இலையான் பூரும் வாயனின் வடிவிலும்
தொியத் தொிய....
இந்த
மனசு தாங்குமா?
இல்லை,
வாலைக் கட்டி விட்ட தும்பியாய்
திாிந்த காற்று
வளர்த்த பூனைபோல்
காலைக் கட்டிக் கொண்டு திாியுமா?
எங்கள்
கிராமம் அவியுது!
முக்கி முக்கிப் பிள்ளை பெறுகிற
மலட்டுச் சாதியாய்
பிறந்த
நாடு கிடந்து நெருப்பில் உழல்கையில்
என்ன புதுமை?
என்ன இனிமை?
நான்
அடையப் போகிறேன்.
வீணாக இந்த மினக்கட்ட நிலவு
இடும்புக்குக் கோர்க்கிறது மாலை!
என்னவாம் சிவந்த கோப்பத்தைப் பூச்சிக்கு
வந்து விழுகிறது தோளில்....?
ஊரே நெட்டை சொல்லி அடிபட்ட அப்பாவி போல விக்கி முகம் விறைத்தாற்போல் கிடக்கிறது.
'ஊர்' அது என்ன செய்யும்? யானையும் யானையும் மறியேறும்போது சும்மாகிடந்த தகரைப்பற்றை மிதிபடுமே, தகரைப்பற்றை அதைப்போல மிதிபட்டு மிதிபட்டு இறகுதிர்ந்த கோழியைப்போல உருக்குலைந்து தவிக்கிறது.
நிலவு ஒழுகுகிறது. வாயில்மண், எதுவும் செஞ்செழிப்பாய்த் தொியவில்லை.
சூத்தை பிடித்து இறந்த பற்களின் இடவு தொியுமே, இடவு அந்தமாதிாி மனிதர் மிதித்துத் துவைத்த தடங்கள் மிகவும் அசிங்கமாய் மூக்கறை போலவும்.
இலையான் பூரும் வாயனின் வடிவிலும் தொியத் தொிய....
இந்த மனசு தாங்குமா? இல்லை, வாலைக் கட்டி விட்ட தும்பியாய் திாிந்த காற்று வளர்த்த பூனைபோல் காலைக் கட்டிக் கொண்டு திாியுமா?
எங்கள் கிராமம் அவியுது!
முக்கி முக்கிப் பிள்ளை பெறுகிற மலட்டுச் சாதியாய் பிறந்த நாடு கிடந்து நெருப்பில் உழல்கையில் என்ன புதுமை? என்ன இனிமை?
நான் அடையப் போகிறேன். வீணாக இந்த மினக்கட்ட நிலவு இடும்புக்குக் கோர்க்கிறது மாலை! என்னவாம் சிவந்த கோப்பத்தைப் பூச்சிக்கு வந்து விழுகிறது தோளில்....?
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|