செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இரண்டாம் உலகம். இந்தப் படம் உலகமுழுவதும் நாளை வெளியாக இருக்கிறது. இரண்டாம் உலகம் படம் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது, இரண்டாம் உலகம் படத்தைப்பொறுத்தவரை, நான் கடவுளுக்கு அடுத்தபடியாக எனது கேரியரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த படம். யாருமே எதிர்பார்க்காத கதாபாத்திரம், பர்பாமென்ஸ் என்று அசத்தியிருக்கிறேன். அந்த அளவுக்கு என்னை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.
மேலும், அனுஷ்காவின் நடிப்பும் பேசப்படும் வகையில் அமைந்திருப்பதால், தெலுங்கில் வர்ணா என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது என்று சொல்லும் ஆர்யா, இன்னும் எத்தனை படங்களில் நடித்தாலும், இப்படத்துக்காக ஜார்ஜியா காடுகளில் முகாமிட்டு கொசுக்கடியிலும், முள் செடிகளுக்கிடையேயும் சிக்கி ரத்தம் சிந்தி நடித்த அனுபவத்தை என்னால் சினிமாவில் இருக்கிற காலம் வரைக்கும் மறக்கவே முடியாது என கூறுகிறார் ஆர்யா...
|