LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதாது, பட்டா பெறுவதும் அவசியம்!

பெரும்பாலானோர் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு,  

கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் நகல் (ஜெராக்ஸ்) பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும். விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும். ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, இரண்டாவது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும். உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும். இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து :
ஒருவர் அதிகாரப் பத்திரம்(Power of Attorney) மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை. மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர்.

ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

by Swathi   on 17 Aug 2017  5 Comments
Tags: Land Registration   land registration procedure in tamil   tamil nadu land registration details   Land   Purchase New Land   சொத்து வில்லங்கம்   சொத்து பிரச்சனை  
 தொடர்புடையவை-Related Articles
சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதாது, பட்டா பெறுவதும் அவசியம்! சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் போதாது, பட்டா பெறுவதும் அவசியம்!
மூன்று ஏக்கர் நிலம் !! மூன்றே மாதம் !! மூன்று லட்சம் வருமானம் !! மூன்று ஏக்கர் நிலம் !! மூன்றே மாதம் !! மூன்று லட்சம் வருமானம் !!
எந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் !! எந்த மண்ணில் எந்த வகையான மரங்கள் வளர்கலாம் !!
மனை வாங்கப் போறீங்கலா !! அப்ப மனையின் அப்ரூவல்(அங்கீகாரம்) பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க !! மனை வாங்கப் போறீங்கலா !! அப்ப மனையின் அப்ரூவல்(அங்கீகாரம்) பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க !!
பட்டா எப்போது தேவை? பட்டா எப்போது தேவை?
கருத்துகள்
29-Oct-2018 12:44:35 Arokiaraj said : Report Abuse
50 rupees draper kaiyuthu lateral Emma Arutham please Answer
 
29-Oct-2018 12:44:26 Arokiaraj said : Report Abuse
50 rupees draper kaiyuthu lateral Emma Arutham please Answer
 
06-Aug-2018 13:41:39 கணேசன் said : Report Abuse
நான் வசிக்கும் இடம் 1990 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது அது இடையில் எனக்கு தெரியாமல் வேறு ஒருவர் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்பட்டவரிடம் இருந்து நான்மீண்டும் எனது பெயருக்கு எழுதி வாங்கி கொண்டேன் மேலும் தாலுகா அலுவலகம் சென்று கேட்டபோது உங்கள் கிராம நிர்வாக அதிகாரிடம் உங்கள் பெயரில் இருந்தது என் எழுதி வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள் நானும் கடந்த ஒரு வருடங்களாக தொடர்ந்து போய் வருகிறேன் ஆனால் கிராம அதிகாரி எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை 5000 ஆயிரம் ரூபாய் பணம் கேட்க்கிறார்கள் நான் என்ன செய்வது, எனக்கு ஆலோசனை கொஞ்சம் சொல்ல முடியுமா. எனக்கு 70 வயது ஆகிறது என்னால் தினமும் போய் வர முடியவில்லை என் பசங்களை அனுப்பினால் உங்கள் அப்பாவை அனுப்புங்கள் என்று சொல்லி விடுகிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து சொல்லுங்கள்
 
01-Feb-2018 08:01:21 Dhanalakshmi said : Report Abuse
How to get nattham patta? My husband's is death. This patta is my father in-law name. How to change my name. Father in-law is death.
 
02-Sep-2017 06:19:13 balambal said : Thank you
பட்டாவின் அவசியத்தை முற்றிலும் உணர்ந்து எங்கள் நிலத்திற்கு ஏற்கனவே இருக்கும் பட்டாவிலிருந்து பிரித்து தர விண்ணப்பம் 2010 லேயே மனு போட்டு விட்டோம். பலவிதமாக முயன்றும் இன்றுவரை அதாவது 7 வருடங்களாக ஒன்றும் நடக்கவில்லை என்பதுதான் நிஜம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.