|
|||||
வேலையில்லா பட்டதாரியும், பொறியாளனும் ஒரே கதையா !! |
|||||
![]() கடந்த மாதம் வெளியான வேலையில்லா பட்டதாரியும், இந்த வாரம் வெளியாக போகும் பொறியாளன் படமும் ஒரே சாயலான கதை என சினிமா வட்டாரங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. கட்டுமான பொறியியல் படித்தவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த வாரம் வெளிக்கிழமை வெளியாகப்போகும் படம் பொறியாளன். 'உதயம் NH4' படத்தை இயக்கிய மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, தாணுகுமார் இயக்க, கிராஸ் ரூட் நிறுவனம் சார்பில் வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை கதாநாயகனாக, ஹரிஷ் கல்யாண், கதாநாயகியாக ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு சிவில் இன்ஜினீயர் தனது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறான் என்பது தான் பொறியாளனின் கதையாம். சமீபத்தில், இதே கதைக்களத்தில் ஹிட்டடித்தது தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி'. தற்போது அதே பாணியிலான கதையா? என சினிமா வட்டாரங்களில் ஒரு சிறிய சலசலப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் பொறியாளன் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ... வரும் வெள்ளிக்கிழமை தெரிந்து விடும்.. பொறியாலனுக்கும், வேலையில்லா பட்டதாரிக்கும் உள்ள தொடர்பு.... |
|||||
by Swathi on 03 Sep 2014 0 Comments | |||||
Tags: Poriyaalan Velai Illa Pattathari வேலையில்லா பட்டதாரி பொறியாளன் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|