LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

2023-ம் ஆண்டு வீனஸ் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டம்!

2023-ம் ஆண்டு, வீனஸ் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப இஸரோ திட்டமிட்டு உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கைக் கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களைப் பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைக் கோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், 2023-ம் ஆண்டு மத்தியில் வெள்ளி கிரகத்துக்கு (வீனஸ்) விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டு உள்ளது.  இந்த விண்கலம் 100 கிலோ எடை, 500 வாட்ஸ் திறன் கொண்டது. இந்த விண்கலம் வெள்ளி கிரகத்தில் இருந்து குறைந்தபட்சமாக 500 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 60 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றி வரும்.

வெள்ளி குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு விண்வெளி முகமைகள், ஆராய்ச்சிக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்து உள்ளது. 

விண் வெளிக்கு தேவையான உபகரணங்கள், ஆய்வுகளை செய்ய விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். விண்வெளி தொடர்பான சோதனைகளை செய்வதற்காக டிசம்பர் 20-ந்தேதி வரை பல்வேறு ஆய்வு குறித்த விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

by Mani Bharathi   on 12 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.