LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

 

ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளைக் கொண்டு ரூ.400 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றும். விருதுநகர் மாவட்டத்தில் புதிய சிறிய டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும் என்றும் தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

தொழில் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டு வரும் ஓசூர் நகரை, உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒரு புதிய மையமாக நிலைநிறுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.


இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலையினைத் தகவல் தொழில்நுட்ப வழித்தடமாக மாற்றி அமைத்ததைப் போன்று ஓசூர் நகரத்தை ஒட்டி உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஓசூர் அறிவுசார் பெரு வழித்தடம் ஒன்று அமைக்கப்படும்.


உலகின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களை அங்கு அமைத்திடத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த வழித்தடத்தில் இடம் பெற்றிருக்கும்.


மத்திய மண்டலத்தில் 5000 நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஏற்கெனவே பசுமை ஹைட்ரஜன் மற்றும் உற்பத்தித் துறையில் கணிசமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் செயற்கை இழை மற்றும் தொழில் நுட்ப ஜவுளித் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவிலும் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.


கோவை மாவட்டம் பம்பு மோட்டார் உற்பத்தி மற்றும் வார்ப்பகத் தொழிலில் நாட்டிலேயே சிறப்பிடம் பெற்றுள்ளது. அத்துறைகளின் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி உயர் தொழில்நுட்ப பம்பு மோட்டார் உற்பத்திக்கான உயர்திறன் மையம் ஒன்றும் வார்ப்பகத் தொழிலுக்கான உயர்திறன் மையம் ஒன்றும், தொழில் கூட்டமைப்பினரோடு இணைந்து டிட்கோ நிறுவனம் அமைக்கும்.

 

by hemavathi   on 18 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம் இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம்
பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள் பள்ளிக்கரணை நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் காணாமல் போன 165 நீர்நிலைகள்
தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி! தமிழ் வார விழா - குரல் கொடுத்த அமைப்புகளுக்கு நன்றி!
'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா! 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா!
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை -  மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு தமிழறிஞர் உதவித்தொகை உயர்வு - குறமகள் இளவெயினிக்கு திருவுருவச்சிலை - மானியக்கோரிக்கை விவாதத்தில் அறிவிப்பு
மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கக் குழு
கடலூர் பெண்  குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.