LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

இடக்கரடக்கல் என்றால் என்ன ?

 ‘அவன் இடக்குப் பண்ணிக்கிட்டே இருக்கறான்...’ என்கிறோம். ‘அவன் பண்றது எல்லாமே இடக்குமடக்காவே இருக்கு...’ என்பதும் உண்டு. இங்கே இடக்கு என்பது என்ன பொருள் தருகிறது ? தவறான, பொருத்தமில்லாத செயல் என்னும் பொருளைத் தருகிறது. அதுபோல் இடக்கர் என்றும் ஒரு சொல் உள்ளது. ‘அவையில் சொல்லக்கூடாத சொல்’ இடக்கர் எனப்படும். அது சொல்தான், தனியாக அணுக்கமானவர்களுடன் இருக்கும்போது, நண்பர்களுடன் உள்ளபோது அதைச் சொல்லலாம். ஆனால், பலரும் கூடியுள்ள இடத்தில் அதைச் சொல்லக்கூடாது. கோழியும் சேவலும் சேர்ந்ததைக் கூற நேரடியான சொற்கள் பல உள்ளன. ஆனால் நாம் நால்வர் மத்தியில் அவ்வாறு கூறுவதில்லை. கிராமத்தில் இதை அருமையாகச் சொல்வார்கள்... ‘சேவல் அணைஞ்சுது’ என்பார்கள். ஒருவன் பேசிய கெட்ட வார்த்தையைச் சொல்ல ‘பச்சையாய்ப் பேசுகிறான்’ என்பார்கள். சிறுநீர், மலம் கழிக்கச் சென்றதைச் சொல்ல ‘ஒன்றுக்கு, இரண்டுக்கு’ என்பனவெல்லாம் இடக்கர் அடக்கல்களே. இடக்கரானவற்றைக் கூறாமல் அடக்கிக்கொள்ளுதல்.

இடக்கரடக்கலோடு இன்னும் இரண்டு வகைமைகள் உள்ளன. அவை மங்கலமும், குழூஉக்குறியும்.

அமங்கலமாகக் கூறவேண்டிய இடத்தும் அவ்வாறு கூற வாய்வராமல் மங்கலமாகக் கூறுவது மங்கலமாகும். செத்தார்’ என்பதை ‘இறைவனடி சேர்ந்தார்’ என்பதும், ‘இல்லை’ என்று சொல்லாமல் ‘நாளைக்கு வாங்க’ என்பதும், ஒருவரிடமிருந்து விடைபெற்றுச் செல்லும்போது ‘போகிறேன்’ என்று சொல்லாமல் ‘வரேன் / வரட்டா ?’ என்பதும் மங்கலங்கள் ஆகும். தற்காலத்தில் ‘நாசமாகப் போய்விடுவாய்’ என்பதற்குப் பதிலாக ‘நீயெல்லாம் நல்லா வருவடா...’ என்று கூறுவதும் இவ்வகையே.

குழூஉக்குறியில் உள்ள குழூஉ என்பது வேறொன்றுமில்லை. குழு என்பதுதான் அது. குழுக்களுக்கிடையே குறிப்பாகப் பயன்படும் சொல். குழுக்களுக்கிடையே பொருள் புரியும்படி சங்கேதமாகப் பேசிக்கொள்வது குழூஉக்குறியாகும். குடிகாரர்கள் மத்தியில் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட ‘சரக்கு’ என்னும் சொல் மதுவுக்கு மாற்றாகப் பயன்பட்ட குழூஉக்குறி ஆகும். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளிடையே புழங்கிய ‘வைட்டமின் ப’ என்ற சொல்லும் குழூஉக்குறிதான்.

அடுத்துள்ள ஒன்றையும் சொல்லிவிடுகிறேன். இரட்டுற மொழிதல். ஒரு சொல் அல்லது சொற்றொடர்க்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் அமையும்படி சொல்வது இரட்டுற மொழிதல் ஆகும். சிலேடை என்பது இதைத்தான். காளமேகப் புலவரின் பாடல்கள் பல இரட்டுற மொழிந்தவையே. தமிழறிஞர்கள் பலர் உரையாடல்களிலேயே சிலேடை விளையாட்டுக் காட்டுவர். கிவாஜ சென்ற மகிழுந்து நடுவழியில் நின்றுவிட்டது. யாரேனும் தள்ளிவிட்டால் கிளப்பலாம் என்கிறார் ஓட்டுநர். கிவாஜ சொல்கிறார் : ‘நான் தள்ளாதவனப்பா..!’

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 17 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 -  பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2
தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1 தகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1
தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார் தகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்
உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை
தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை தாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை
தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள்.  1 தாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்
என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்?  என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்? 
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.