LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் ஒரு பார்வை

முதலாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் 23 வரை நடத்தப்பட்டது.

இப்படம் : முதலாவது மாநாட்டில் திரு. சேவியர் தனிநாயகம் அடிகளார் அவர்கள் அறிமுக உரை ஆற்றிய பொழுது.


இரண்டாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1968 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 முதல் 10 வரை நடத்தப்பட்டது.

இம்மாநாடு சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் திரு. கா. ந. அண்ணாதுரை அவர்கள் முன்னிலையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

இப்படம் : இரண்டாவது மாநாட்டில் வெளியிடப்பட்ட விழா மலரின் அட்டைப் படம்.

 

மூன்றாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” ஐரோப்பாவில் உள்ள பிரான்சு நாட்டின் தலைநகர் பாரீசில் 1970 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15 முதல் 18 வரை நடத்தப்பட்டது. இம்மாநாடு பிரான்சில் புகழ்பெற்ற ’பிரான்சுக் கல்லூரியில் நடைபெற்றது.

இம்மாநாடு பிரஞ்சுப் பேராசிரியர், மருத்துவர் திரு. ழான் ஃபில்லியொசா அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது, இவர் புதுச்சேரியில் ‘பிரஞ்சுக் கழகத்தை’ நிறுவியவர்.

இப்படம் : திரு. திரு. ழான் ஃபில்லியொசா


நான்காவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” யாழ்ப்பாண நகரில் 1974 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3 முதல் 9 வரை நடத்தப்பட்டது. இம்மாநாடு யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

இம்மாநாடு வணக்கத்திற்குரிய திரு. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இப்படம் : ”பெரும் புலவர்” பேராசிரியர் திரு. நயினார் முகமது அவர்கள் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உரை ஆற்றிய பொழுது

 

ஐந்தாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் 1981 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 4 முதல் 10 வரை நடத்தப்பட்டது. இம்மாநாடு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ம.கோ. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் நடைபெற்றது. இம்மாநாட்டின் பொழுது மதுரை தமுக்கம் திடல் அருகே தமிழன்னை சிலை திறக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டு திரு. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் தொடங்கப்பட்டு 1966 முதல் அடிகளாரில் தலைமையில் முதல் நான்கு மாநாடுகள் நடைபெற்றது. 1980 ஆம் ஆண்டு அடிகளார் அவர்களின் மறைவிற்கு பிறகு நடைபெற்ற முதல் மாநாடு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் மாநாடு. அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இப்படம் : மாநாட்டு மலரின் அட்டைப்படம்.


ஆறாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” இரண்டாவது முறையாக மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் நகரில் 1987 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 முதல் 19 வரை நடத்தப்பட்டது. இம்மாநாடு அன்றைய மலேசிய அமைச்சராகவும், ம.இ.கா தேசியத் தலைவராகவும் இருந்த திரு. சா. சாமிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்படம் : திரு. சா. சாமிவேலு அவர்கள்


ஏழாவது ‘உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு” ஆப்ரிக்காவின் மொரிசீயசில் உள்ள மோகா நகரில் 1989 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 1 முதல் 8 வரை நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக சப்பான் நாட்டைச் சேர்ந்த அறிஞர். திரு. நோபூரு கராசிமா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படம் : திரு. நோபூரு கராசிமா அவர்கள்

 

 

மொரீசியஸ் மாநாடு
by Swathi   on 05 Nov 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
14-Jan-2019 16:56:40 மனோஜ்குமார் said : Report Abuse
என்னுடைய கவிதைகளை எவ்வாறு பதிவேற்றுவது இங்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.