|
||||||
இவன் வேற மாதிரி திரை விமர்சனம் !! |
||||||
![]() நடிகர் : விகாரம் பிரபு
நடிகை : சுரபி
இயக்கம் : எம். சரவணன்
இசை : சி.சத்யா
கதை சுருக்கம் :
ஒரு சட்ட கல்லூரி கலவரத்திற்கு காரணமான சட்ட அமைச்சரை, ஒரு சாதாரண மனிதன் பழி வாங்கும் போது, அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே படத்தின் சுருக்கமான கதை.
விரிவான கதை :
படத்தின் துவக்கத்திலேயே சட்டக்கல்லூரி கலவரம் நடக்கிறது. அதனை போலீஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அமைச்சருக்கு ஒரு ரவுடி தம்பி, ஜெயிலில் இருந்து 15 நாள் பரோலில் வருகிறார். அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டிருப்பது அமைச்சர். எனவே அமைச்சரின் தம்பியை கடத்தி, மீதமிருக்கும் ஆறுநாள் உள்ளே வைத்தால், சட்ட அமைச்சர் உள்ளே போவார். பதவியும் பறிபோகும் என்று பிளான் பண்ணித் தூக்குகிறார் விக்ரம் பிரபு.
இப்படியே ஆக்சன் காட்சிகள் நகர, இன்னொரு பக்கம் ஹீரோயின் உடனான காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. அவர்கள் முதல் சந்திப்பில் ஆரம்பித்து, தற்செயலாக மீண்டும் பஸ்ஸில் சந்திப்பது, பஸ்ஸில் விக்ரம் பிரபு தரும் மீன்களை ஹீரோயின் வளப்பது இளமை துள்ளும் ஒரு காதல் கதை. இதுவரை வராத காதல் காட்சிகளாக இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள் போல. ஆனாலும் எங்கேயும் எப்போதும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லைபா.
இடைவேளையில் அமைச்சருக்கு பதவி போக, அமைச்சரின் தம்பி திரும்பி வருகிறார். இரண்டாம்பாதியில் வில்லன் கோஷ்டியின் கிரிமினல் வேலைகள் ஆரம்பமாகிறது. கூடவே நம்மை சீட்டின் நுனிக்குத்தள்ளும் ஆக்சன் காட்சிகளும். எப்பா...ரொம்ப நாளாகிடுசுப்பா, இப்படி ஒரு பரபர கிளைமாக்ஸ் பார்த்து. பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.
விக்ரம் பிரபு ஒரு நல்ல ஆக்சன் ஹீரோவாக இந்தப் படம் மூலம் தன்னை நிலைநிறுத்தி விட்டார். காதல் காட்சிகளிலும் செம....... கும்கி பட வாய்ப்பை வலியக்கேட்டு நடித்தவர் என்பதால், இவரது கதைத்தேர்வில் நம்பிக்கை இருந்தது. இதிலும் அவர் நம் நம்பிக்கையை காப்பாற்றி விட்டார்.
ஒரு ஆக்சன் படத்திற்கு ஏற்ற வில்லனாக வம்சி கிருஷ்ணன் நடித்திருக்கிறார். முதல் பாதி முழுக்க, ஒரே ரூமில் அடைபட்டுக்கிடந்தாலும், தொடர்ந்து தப்பிக்க முயலும்போதும், கடைசிவரை ஹீரோவை பழி வாங்கியே தீருவேன் என்று திரியும்போதும் மிரட்டுகிறார்.
ஹீரோயின் சுரபிக்கு ரகளையான கேரக்டர். 19 அரியர்ஸ் வைத்துக்கொண்டு, ஹீரோ தந்த மீன்களை திருப்பித் தர வார் எடுக்கும் முயற்சிகளில் அசத்துகிறார். ஆனாலும் ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள ஏதோவொன்று குறைகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க்கினாலும், அவரை மையப்படுத்தியே காட்சிகள் நகர்வதாலும் நம் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.
கணேஷ் வெங்கட்ராமனுக்கு இதில் போலீஸ் ஆபீசர் வேடம். பாதிப்படத்திற்கு மேல் தான் வருகிறார். கிளைமாக்ஸில் மட்டும் விறுவிறுப்பான நடிப்பு. மற்ற காட்சிகளில் அவர் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அமைச்சராக நடித்திருப்பவரும் ரியல் அரசியல்வதி மாதிரியே இருக்கிறார்.
சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது. ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் முதல் ஃபைட்டில் வரும் ஸ்டெப் எல்லாமே புதிதாக இருந்தது. கிளைமாக்ஸ் வரை அது தொடர்ந்தது. கொஞ்சம் பழைய கதைக்கரு தான் என்றாலும், பாத்திரப் படைப்பிலும் திரைக்கதை உத்தியிலும் ஒரு தரமான ஆக்சன் த்ரில்லர் படத்தை தந்ததற்காக இயக்குனர் சரவணனை பாராட்டலாம்.
மொத்தத்தில் இவன் வேற மாதிரி ஆக்சன் + திரில்லர்....... |
||||||
Ivan Vera Mathiri Bike Stunts | ||||||
by Swathi on 13 Dec 2013 1 Comments | ||||||
Tags: Ivan Vera Mathiri Ivan Vera Mathiri Movie Ivan Vera Mathiri Thirai Vimarsanam இவன் வேற மாதிரி | ||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|