LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கானாடுகாத்தான் -வள்ளுவர் அறிவகம் அடிக்கல் நாட்டுவிழா

முனைவர்.அழகப்பா இராம்மோகன் அவர்களின் கனவுத் திட்டமான " திருக்குறள் அறிவகம் அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான கானாடுகாத்தானில் 26.12.2019 அன்று மிக  எழுச்சியுடன் நடைபெற்றது. 

 அவருடன் பழகிய நண்பர்கள், உறவினர்கள், அறிஞர்கள் என்று பல நாடுகளிலிருந்து முதல்நாளே வந்து தங்கி முழுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது சிந்தனைகளை, அறக்கட்டளைக்கு அடிக்கல் நாட்டி, அதன் செயல்பாடுகளைக் குறித்துத் திட்டமிட்டனர். 

இந்நிகழ்வில் திரு.பழ. கருப்பையா, திரு.சுப.வீரபாண்டியன் , திரு.ஆறுமுகம் பரசுராமன் - முன்னாள் கல்வி அமைச்சர், மொரீசியஸ்,   திரு.ஸ்டாலின் குணசேகரன், முனைவர்.ஆயிக்கவுண்டன் , வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி, திரு.கொழந்தைவேல்  இராமசாமி -வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் மக்கள் தொடர்பு , ச.பார்த்தசாரதி, வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் ஆசிரியர், திரு.குமார் குமரப்பன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் அறக்கட்டளை அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.  அதன்பிறகு முனைவர்.அழகப்பா இராம்மோகன் அவர்களுடனான நினைவுகளை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் பகிர்ந்துகொண்டனர். அதில் உரையாற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் வலைத்தமிழ் தொடங்கியுள்ள திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களைத் தொகுக்கும் திட்டத்திற்கு முனைவர் அழகப்பா ராம்மோகன் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.  உலக நாடுகளிலிருந்து தொகுக்கும் திருக்குறளின் அனைத்து மொழிபெயர்ப்பு நூல்களையும் திருக்குறள் அறிவகத்தில் வைத்து உலகத் தமிழர்கள் பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என்று அறிவித்தார். 

முனைவர்.  இம்மண்ணிலிருந்து விடைபெற்றாலும், அவரது சிந்தனையில், அவரது திட்டமிடலில், அவரது சொந்த உழைப்பில் சேர்த்த செல்வத்தின் ஒரு பகுதியை  தன் கிராமத்தில் அந்த கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள மக்களுக்கும் பயனளிக்கும் நோக்கில் ஒரு திட்டமாகச் செயல்படுத்த அனைத்து முன்னேற்பாடுகளையும்  செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வள்ளுவர் அறிவகம் நூலகம், படிப்பகம், கணினி மையம் , பயிற்சி மையம், மனவழி உள்நோக்கு மையம் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். 
by Swathi   on 21 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஒரு ₹1 ரூபாய்க்கு $1 ஒரு டாலர் ஒரு ₹1 ரூபாய்க்கு $1 ஒரு டாலர்
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணையவழிப் பயிலரங்கம் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணையவழிப் பயிலரங்கம்
வாங்க பேசலாம் with P.K. INIAN வாங்க பேசலாம் with P.K. INIAN
சேலம் மாவட்டத்தில் எத்தனை பட்டிகள்? சேலம் மாவட்டத்தில் எத்தனை பட்டிகள்?
கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்வியல் நெறிகளும், பயிற்சிகள்.. கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்வியல் நெறிகளும், பயிற்சிகள்..
அனைத்துலக தமிழ்ப் பெண்கள் இயக்கம்-Tamil Women International அனைத்துலக தமிழ்ப் பெண்கள் இயக்கம்-Tamil Women International
09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 09/03/20 திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்
பெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா பெண்மையைப் போற்றுவோம் - தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் மாலுமி ரேஷ்மா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.