|
||||||||
கார்த்திகை தீபம் |
||||||||
கார்த்திகைத் தீபத் திருநாள் தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும் இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பரில் வரும். இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். கார்த்திகை மாதத்தில் வரும் நட்சத்திரத் தினத்தை முருகனுக்கு உகந்த நாளாகக் கருதி பக்தர்கள் பூசைகள் மேற்கொள்கின்றார்கள். முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாகப் பிறந்து தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய்யைக் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாகக் கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமல் எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச்சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. பிறகு வாமன அவதாரத்தில் விஷ்ணு மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, அரிசி மாவை மஞ்சள் நீரில் கரைத்து, சிறிது கெட்டியான பதத்தில் வைத்து அதில் பெண்கள் வலது கையை நனைத்து, வீட்டுக் கதவுகளில் அப்படியே பதிப்பார்கள் இல்லையெனில் சிலர் ஆமணக்கு இலையை அச்சாக வைத்துக் கதவில் பதித்தும் அலங்கரிக்கும் வழக்கமுண்டு . மாலை ஆறு மணிக்கு மேல், வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வாசல்படியிலும், நுழைவு வாயிலிலும் குறைந்தது ஆறு விளக்கு முதல் அதிகபட்சமாக எவ்வளவு விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம். விளக்கின் முன் இலை விரித்து அதில் பிடி கொழுக்கட்டை அல்லது பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை,அவல் , கார்த்திகை பொரி, பழம் வைத்துப் படைத்தும் இறைவனை வணங்குவது வழக்கம். திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்குப் பரணி தீபம் முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது. சிறு சிறு ஊர்களில் கூட 'சொக்கப்பனை' ஏற்றி இறைவனை வணங்கும் வழக்கம் உள்ளது. 'கார்த்திகை விளக்கிட்டனன்' என்று மலையில் தீபம் ஏற்றுவதைச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. இவ்வாறு இலக்கியங்கள் கூறும் இந்தத் தீபத்திருநாளில் நமது பாரம்பரிய மரமாகிய பனையிலிருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து வான வேடிக்கைகள் செய்து மகிழ்ந்த காலமும் உண்டு . அதாவது பனை மரம் ஏறி தேவையான பனை புடக்கையைக் கொண்டு வந்து குழி தோண்டி புடக்கை இருக்கும் அளவுக்கு நாளு, ஐந்து குழியாகத் தோண்டி புடக்கைய போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி வேக வைத்து பிறகு முறத்தால் வீசி , புகை நிறைய வந்து கொழுந்து விட்டு எரியும் போது அதன் மேல் மண்ணை அள்ளி போட்டு மூடி ஒரு அரை மணிநேரம் கழித்து பின்பு சூடு தெளிந்த பின் ஓரு கல் எடுத்து ஒவ்வொன்றாகப் போட்டு அரைத்து அதில் சிறிது உப்பும் போட்டு அரைத்து பிறகு வீட்டுப் பெரியவர்களின் பழைய வேட்டி , பழைய லுங்கி எடுத்துக் கிழித்துப் பெரிதாக முட்டை போல கட்டி, அதை நல்ல தடியா இருக்குற பனை மரத்தை மூன்றாகப் பிளந்து அதன் நடுவில் இட்டு பின்பு வீட்டுல இருக்குற ஆடு மாடு கட்டும் கயிரை எடுத்து நல்லா இறுக்கி கட்டி வைத்து சாமிக்குப் படைத்து நிலா வந்ததும் அடுப்பில் இருக்கின்ற நெருப்பை அது மேல போட்டு உப்பு கொஞ்சம் நிறையப் போட்டு பெரிசா நெருப்பு போல வந்ததும் வீட்டை விட்டு வெளிய வந்து ஊர் நடுவே உள்ள பொது இடத்துக்கு வந்து தலைக்கு மேல வேகமா "கார்த்தி கார்த்தி கம்மா கார்த்தி" ன்னு சுத்தி விடுற சந்தோசமான திருவிழாதான் இந்த கார்த்திகை திருவிழா என்பது மகிழ்வான நினைவுகளாகும்.
கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை சொக்கப்பனை கொளுத்துவார்கள். தேவ மரம் பனை கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. முக்கி நிலை அடிமுடி தெரியாத சிவன் பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது நம்பிக்கை. கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் சிவமாக காட்சி தரும் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதால் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
||||||||
by Swathi on 22 Jan 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|