LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

மல்லிகை சாகுபடிதொழில் நுட்பங்கள்

மல்லிகை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து திருநெல்வேலி மாவட்டம் கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடையம் வட்டாரத்தில் ஏ.பி.நாடானூர், வெங்கடாம்பட்டி, அஞ்சாங்கட்டளை, கடையம் பெரும்பத்து பகுதியில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. 


மல்லிகை பூவில் சிங்கிள் மோக்ரா, டபுள் மோக்ரா, குண்டுமல்லி, ராமநாதபுரம் போன்ற ரகங்கள் ஏற்றதாகும்.ஜூன் முதல் நவம்பர் வரை மல்லிகை நடவு செய்யலாம். 30 செ.மீ.க்கு 30 செ.மீ.க்கு 30 செ.மீ.என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். 1.25 மீட்டர் இருபுறமும் இடைவெளி விட்டு ஹெக்டேருக்கு 6 ஆயிரத்து 400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள் நடவு செய்ய வேண்டும்.செடிக்கு சாண உரம் 10 கிலோவும், தழை, மணி சாம்பல் சத்து 60:120:120 கிராம் என்ற விகிதத்தால் கவாத்து செய்த பின் ஜூன், ஜூலை மாதத்தில் இட வேண்டும். 


நவம்பர் இறுதி வாரத்தில் தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ.உயரத்தில் செடிகளை கவாத்து செய்ய வேண்டும்.மொட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த மனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.


சிவப்பு முரணை நோயை கட்டுப்படுத்த டைகோபால் 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நூர்புழுவை கட்டுப்படுத்த டெமிக் குருணைகள் 10 கிராம் செடிக்கு அளவில் வேர் பகுதியை சுற்றி இடவேண்டும். நேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியை சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும்.


இரும்பு பற்றாக்குறை இருந்தால் இலைகளின் ஓரங்கள் வெளுத்தும், மஞ்சளாகவும் காணப்படும். இரும்பு சல்பேட் 5 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். மலர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும். ஹெக்டேருக்கு 8 ஆயிரத்து 750 கிலோ மலர்கள் கிடைக்கும். காலை 6 மணி முதல் 8 மணிக்குள் மலர்களை பறித்து வியாபாரத்திற்கு அனுப்ப வேண்டும். 300 காஜ் தடிமனுள்ள பாலிதீன் பைகளில் பூக்களை அனுப்புவதால் 72 மணி நேரம் மலராமல் இருக்கும் என கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயக்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

by Swathi   on 20 Mar 2014  5 Comments
Tags: மல்லிகை சாகுபடி   மல்லிகை   Malligai   Jasmine Cultivation           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
01-Oct-2017 14:49:34 கார்த்திக் ராஜா said : Report Abuse
மல்லிகை பூ நாற்றுக்கு தொடர்பு கொள்ள 9047492124
 
13-Apr-2016 18:14:24 இளையராஜா said : Report Abuse
ராமநாதபுரம் மல்லிகை கன்றுகள் திரு .முருகேசன் ,நொச்சியூரணி கிராமம் ராமநாத புரம் மாவட்டம் ,அலைபேசி எண் தொடர்புக்கு 9865569020
 
18-Aug-2015 04:09:24 S.புருஷோத்தமன் said : Report Abuse
மல்லிகை சாகுபடி குறித்து திரு.ஜெயகுமார் அவர்கள் கூறிய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வலை தமிழுக்கு நன்றி! நன்றி! நன்றி
 
25-Mar-2015 12:11:27 Ramesh Kannan said : Report Abuse
Malligai பூ சாகுபடி செய்ய thevaiyana பதியம் கன்றுகள் எங்கு kedaikum
 
25-Mar-2015 12:09:45 Ramesh Kannan said : Report Abuse
Malligai பூ சாகுபடி செய்ய thevaiyana பதியம் கன்றுகள் எங்கு kedaikum
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.