LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மஞ்சள் காமாலை (Icterus)

மஞ்சள் காமாலை நோய்க்கான காரணங்களும், தீர்வுகளும் !!!

மஞ்சள் காமாலை நோயானது, உடலில் பித்தம் அதிகரிப்பால் ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை உருவாக காரணங்கள் :
உடல் வெப்பம் அதிகரித்தல், தூக்கமின்மை, வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறுதல் ஆகிய காரணங்களால் மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது. உடலில் ஏற்படும் பித்தமானது, நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும், ஒரு முறை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுசெய்து பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.
மஞ்சள் காமாலைக்கு தீர்வு :
மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கைப்பிடி கீழாநெல்லியும், ஒரு ஸ்பூன் சீரகம் ஆகிய இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் குறையும். கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம். கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

by Swathi   on 28 Aug 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.