|
|||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -20 , ஜெயா மாறன்,அட்லாண்டா (ஜியார்ஜியா), வட அமெரிக்கா |
|||||||||
![]() பெயர் : ஜெயா மாறன்
கடந்த இருபது ஆண்டுகளாக ஜெயா மாறன் அமெரிக்க தமிழ்ப்புலத்தில் கவிஞர்,மேடைப் பேச்சாளர், பட்டிமன்றப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர், ஊடகவியலாளர் என பன்முகத்தன்மையோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல், அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தில் பல உயரிய பொறுப்புகளை வகித்த ஜெயா மாறன் ஒரு பகுதி நேர தமிழாசிரியரும் கூட. சிறுவர் இலக்கியத்தில் நாட்டம் கொண்ட இவர் உணர்வோட்டத்தோடு சிறுவர்களுக்குக் கதை சொல்லும் நேர்த்தி பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இவருடைய கவிதைகள், கட்டுரைகள் தமிழின் பல முன்னணி இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு நூல்களை எழுதியுள்ள ஜெயா மாறன் பல உயரிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டுள்ளார். அதில் 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அளவிலான பேச்சுப் போட்டியில் வென்றதால் கிடைத்த ஞானபாரதி-2020 விருதும், சிறந்த நடிகைக்கான தமிழன்பன்-80 விருதும் குறிப்பிடத்தக்கவை.
நூல்கள்:
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். |
|||||||||
![]() ![]() |
|||||||||
![]() ![]() |
|||||||||
by Swathi on 19 Nov 2022 0 Comments | |||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|