LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

ஜீவாவின் ஜீவன்

நீண்ட நாளைக்குப் பிறகு இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் .

வாப்பா உன் பையன் எப்படி இருக்கிறான் ? என்று நண்பர் கேட்க ,

அவன் பெரிய குடிகாரன் . ஊர்லே ரவுடிகளோட தொடர்பு , அடிதடி , சும்மாவே இருக்க மாட்டான்

திருத்த முயற்சிக்கிறது தானே ?

எவ்வளவோ முயற்சித்தும் முடியலே . எந்த வேலையில் சேர்த்தாலும் நீடிக்க மாட்டான் . அதான் நானே தண்ணி தெளிச்சி விட்டுட்டேன் .

பரவாயில்லை . இப்ப எந்த கட்சியிலே எம் . எல்ஏ . வா இருக்கிறார் என்றார் .

எந்தக் கட்சி ஆட்சியிலே இருக்கோ ? அதுலேதான் இருப்பான் என்றார் .

இப்படி சுயலாபத்துக்காக அரசியலில் இருப்பவர்கள் பலர் . ஆனால் எந்தக் கட்சிக்காரர் என்றாலும் அவர்களிடமும் அன்பு செலுத்துபவர் தலைவர் .

சென்னை - தாம்பரம் குடிசைவாசிகளுக்குப் பட்டா தரவேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ப . ஜீவானந்தம் போராடிக்கொண்டிருந்தார் . அப்போது காமராசர் முதலமைச்சராக இருந்தார் . தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைக்க பெருந்தலைவர் சென்றார் . அந்த வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது . காரை நிறுத்தச்சொல்லி ஜீவாவின் வீட்டிற்குள் நுழைந்தார் . அது ஒரு கூரை பிய்ந்துபோன குடிசை வீடு .

அந்த நேரத்தில் தலைவரை ஜீவா எதிர்பார்க்கவில்லை . என்ன இந்த வீட்டில் இருக்கிறீர்களே என்று கண்கலங்கினார்தலைவர் . எல்லாரையும் போலத்தானே நானும் என்றார் ஜீவா .

ஆரம்பப் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைக்க வந்தேன் . வழியில் உங்கள் வீடு இருந்ததால் உங்களையும் பார்க்க வந்தேன் என்ற தலைவர் அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவாதான் என்பதைத் தெரிந்து கொண்டு அவரையும் தன்னுடன் விழாவுக்கு அழைத்துச் சென்றார் .

சிறிது காலத்தில் ஜீவாவின் துணைவியாருக்கு ஒரு உத்தியோகம் கிடைத்தது . அது பெருந்தலைவரால்தான் கிடைத்தது என்பது பின்னால் தெரியவந்தது . பிறகு ஜீவா ஒரு நல்ல வீட்டில் இருக்க வேண்டும என விரும்பிய பெருந்தலைவர் அதற்காகவும் உதவி செய்தார் . நோய்வாய்ப்பட்டு சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்து ஜீவா கடைசியாக சொன்ன வார்த்தை காமராசருக்கு டெலிபோன் பண்ணுங்க என்பது தான் .

உயிர் பிரியும் வேளையில் கூட ஜீவாவின் உள்ளத்தில் பெருந்தலைவர் இருந்தார் . நாட்டை சமதர்மப் பாதையில் நடத்திச்செல்கிறார் என்பதும் அவரது மனித நேயமும் ஜீவாவின் நெஞ்சில் பெருந்தலைவரை நிறுத்தியதில் வியப்பில்லை .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.