|
|||||
ஜில்லா - திரைவிமர்சனம் !! |
|||||
![]() இயக்குனர் : இரா.தி. நேசன்
தயாரிப்பாளர் : ஆர்.பி. செளத்ரி
நடிகர் : விஜய், மோகன் லால்
நடிகை : காஜல் அகர்வால்
இசை : டி. இமான்
ஒரு ஊரில் பெரிய தாதாவாக வருகிறார் மோகன்லால். அவரது நெருங்கிய அடியாளின் பிள்ளையாக வருகிறார் விஜய். ஒரு சம்பவத்தில் மோகன்லாலுக்காக போலீஸின் கையால் விஜயின் அப்பா இறக்க நேர்கிறது. இதனால், தனக்காக உயிரைக் கொடுத்த அடியாளின் பிள்ளையை தன் பிள்ளையாகவே வளர்க்கிறார் தாதா மோகன்லால். மோகன்லாலை யார் எதிர்த்தாலும் அவர்களை காலி பண்ணும் பாசக்காரப்பிள்ளையாக உருவெடுக்கிறார் விஜய். தனது தாதாயிசம் பிரச்சினையின்றித் தொடர, போலீஸில் நம் ஆள் இருவன் இருந்தால் நல்லதே என்று மோகன்லால் விஜய்யை போலீஸ் ஆக்குகிறார். போலீஸ் ஆன பிறகே, வளர்ப்பு அப்பாவின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது விஜய்க்கு புரியவருகிறது. இதனை அடுத்து நல்ல போலீஸாக மனம் திருந்தி, மோகன்லாலையும் திருத்திக்காட்டுவேன் என்று சவால் விடுகிறார் விஜய். இறுதியில் விஜய், நினைத்ததை முடித்தாரா, மோகன்லால் திருந்தினாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.
படத்தின் முதல் பாதி ஆக்சன் + காமெடி என ஜாலியாக போக, இரண்டாவது பாதி அன்பு + நீதிக்குப் போராடுதல் எனப் போகிறது. விஜய் போலீஸ் ஆகி பின்னர் மனம் திருந்தி மோகன்லாலிடம் சவால் விடும்போது இண்டர்வெல் வருகிறது. அதன்பிறகு மோகன்லாலுக்கும் விஜய்க்கும் நடக்கும் பாசப்போராட்டம்+நீதிப்போராட்டத்திலேயே அடுத்து ஒரு மணிநேரம் ஓடிவிடுகிறது.
மோகன்லால் திருந்த தடையாக இருப்பது அவரது ஈகோ தான். அதை அவரது வளர்ப்புப்பிள்ளை எப்படி மாற்றுகிறார் என்று படத்தை முடித்திருந்தாலே, படம் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இரண்டரை மணிநேரம் படம் ஓடியபின், கூடவே இருந்த சம்பத் வில்லன் என்று தெரிகிறது. பிறகு சம்பத்திடம் இருந்து மோகன்லால் குடும்பத்தைக் காப்பாற்ற விஜய் போராடுவது, அதில் தம்பியை இழப்பது, அந்த பழி விஜய் மீதே விழுவது என்று வழக்கமான விஜய் மசாலாவிற்குள் கடைசி அரைமணி நேர படம் சிக்கிவிடுகிறது.
கடைசி கட்ட இழுவையான காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தைக் சற்று குறைக்கின்றன. லாஜிக்கே இல்லாத சில காட்சிகளும் ஆங்கங்கே எட்டி பார்கின்றன. இருந்தாலும் ஆக்சன் காட்சிகள்+காமெடி+காதல் என கலந்து கொடுத்திருப்பதால், ஜாலியான படம் என்றே சொல்லலாம்.
விஜய், மோகன்லால் ஓப்பனிங் சீன், செம.... தியேட்டரே அதிர்கிறதுனா பார்த்துக்கோங்களேன். தன் அப்பாவைக் கொன்னது போலீஸ் என்பதால், விஜய்க்கு போலீஸ் என்றாலே பிடிப்பதில்லை. அதைவைத்து அவர் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். காஜலைப் பார்த்தவுடனேயே காதலில் விழுவது, கஜலை பெண் கேட்டு அடியாள் பட்டாளத்துடன் போவது, அவரும் போலீஸ் என தெரியும் காட்சிகள் செம காமெடி. விஜய் ஒரு ஜாலியான ஆளாகவும், ஆக்ரோசமான ஹீரோவாகவும் ஒரே நேரத்தில் ஸ்கோர் பண்ணுகிறார். விஜயின் நடனத்தைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
ஜில்லவை மேலும் மெருகேற்றுவது சேட்டன் மோகன்லாலில் நடிப்பும் தான். ஆரம்பத்தில் காட்டும் கம்பீரமாகட்டும், பிள்ளையே எதிர்ப்பதை நினைத்து கலங்குவதாகட்டும், சேட்டன் பின்னிப்பிடல் எடுக்கிறார். படத்தின் பாதியிலேயே போட்டு தள்ளிவிடுவார்களோ என்று நினைத்தால், இறுதிவரை வருகின்ற முக்கியமான கேரக்டர். இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். மோகன்லாலின் பன்ச் டயலாக்குகள் ம்ம்ம்........
போலீஸ் கெட்டப்பில் வருவதாலோ என்னவோ, கஜல் கொஞ்சம் டல்லடிக்கிறார். கஜலுக்கு பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லையென்றாலும், காமெடிக்காட்சிகளில் கலக்குகிறார். அதுவும் சூரியுடன் சேர்ந்து செய்யும் காமெடிகள் சிரிப்பின் உச்சம்.
சூரி இந்த படத்தில் தனக்கான வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். இவர் வரும் காட்சிகள் எல்லாமே சிரிப்பு மழை தான். அறிமுகம் ஆகும் காட்சியிலேயே போலீஸ் ட்ரெஸ்ஸுடன் வந்து, விஜய்யிடம் சிக்கி சின்னாப்பின்னமாவதும், விஜய் என்.சி.சி.கேர்ள்க்கு சூரியை வைத்து கராத்தே கிளாஸ் எடுப்பதும் செம காமெடி.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
மொத்தத்தில் ஜில்லா...... ரசிகர்களுக்கு ஒரு காமெடி + ஆக்சன் கலந்த பொங்கல் விருந்து......... |
|||||
Jilla movie Vijay and Kajal Agarwal | |||||
by Swathi on 09 Jan 2014 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|