|
|||||
சவாலான வேடத்தில் ஜோதிகா !! |
|||||
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த, ஹவ் ஓல்ட் ஆர் யூ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடித்து வருகிறார். படத்தின் கதை : கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டு தாழ்வு மனப்பான்மையுடன் வருமானமின்றி ஒரு பெண் கஷ்டப்படுகிறாள். அதிலிருந்து சக பெண்களுடன் இணைந்து வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறி தோட்டங்கள் வளர்த்து பொருளாதாரத்தில் எப்படி உயர்கிறாள். பிறகு அவளை இந்த தேசமே திரும்பிப் பார்க்கும்படி புரட்சிக்கரமான பெண்ணாக எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் கதை. மேலும் படத்தின் இறுதி காட்சியில் ஜனாதிபதி, ஜோதிகாவை மேடையில் அழைத்துப் பாராட்டுவது போல் படம் முடிகிறதாம். தற்போது இந்த படத்தின் முக்கியக் காட்சிகள் டெல்லியில் எடுக்கப்பட்டு வருகிறதாம். |
|||||
by Swathi on 24 Nov 2014 0 Comments | |||||
Tags: How Old Are You Remake Jyothika ஜோதிகா ஹவ் ஓல்ட் ஆர் யூ | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|