|
||||||||||||||||||
காடு, அதை நாடு… |
||||||||||||||||||
![]() பழனிச்சாமியால் தூங்க முடியவில்லை....
கண்களை மூடினா காது கூர்மையாயிடுது. சின்னச் சத்தம் கேட்டாலும் கூட படுக்கையிலிருந்து எழுந்து உட்காருவாரு. அவருடைய மனைவியும், மக்களும் நல்லா ஆழ்ந்து தூங்கிட்டிருப்பாங்க. அவங்களைப் பார்த்து விட்டு மறுபடியும் படுத்துத் தூங்கலாம்ணு முயற்சி பண்ணுவார். இருந்தாலும் அவரால் தூங்கமுடிய வில்லை.. அவருடைய மனசில் பழய நினைவுகள் ஒவொன்றாக வந்து வந்து போனது.
வாளையார் காட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நிலத்துக்குக் கொஞ்சம் விலை குறைவாக இருக்குண்ணு தெரிஞ்சுகிட்டு ஊர்ல இருக்கிற நிலத்தை விற்று, கையில் இருக்கிற கொஞ்ச நஞ்ச தொகையையும் சேர்த்து வாளையார்லில் நாலு ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் பண்ணலாம்ணு முடிவு செய்து இடத்தை வாங்கினாரர். இன்னும் யாரும் அந்தப் பக்கம் வந்து விவசாயம் பண்ணத் தொடங்கவில்லை. அதனால் இந்த இடம் அவருக்கு குறைந்த விலைக்கு கிடைத்தது.
முதலில் கொஞ்சம் சிரமமாத்தான் இருந்தது. ஆனா அங்க, இங்க கடன உடன வாங்கி ஒரு கிணறு போடறதுக்கு ஏற்பாடு பண்ணினார். நிலத்தைத் தோண்டி குழாய் இறங்க இறங்க அவருடைய மனசுலையும் எதிர்பார்ப்பு பெருகிகிட்டே போனது. கடைசியில் குழாயிருந்து தண்ணீர் பீச்சிகிட்டு வந்ததும் அவரு பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பணத்தை முடக்கி பைப்பு போட்டு, கால்வாய் வெட்டி விவசாயத்திற்கு தயாரானார். கரும்பு பயிரிட்டார், வாழை வைத்தார். அவை நல்லா வந்தது. ஆனா அதக்குப் பிறகுதான் பிரச்சனையே ஆரம்பமானது.
ஒரு நாள் காலையில் எந்திரிச்சு பார்த்தா பத்து நூறு வாழைகள் விழுந்துகிடக்கு. பழனிச்சாமிக்கு என்ன செய்யறதுண்ணே தெரியவில்லை... மனைவிகிட்டே பேசினார்.
நண்பர்களை கூப்பிட்டுப் பேசினார்...
சுற்றும் கம்பி வேலி போடலாம்ணு முடிவுக்கு வந்தாரு. கம்பி வேலியும் போட்டாரு. மூன்றாம் நாள் போனாரு. ஆகா எதுவும் ஆக வில்லை ஒரு வாரம் போனது. பரவாயில்லை கம்பி வேலி போட்டது நல்லாதாச்சுண்ணு நினைத்துகிட்டிருந்தப்போ யானைக வந்தது. சரியா கம்பி வேலிக் காகப் போடப்பட்டிருந்த கல்லை தும்பிக்கையால் சுற்றிப்புடுங்கி எறிஞ்சிருச்சு.
அடுத்தநாள் வயலுக்கு வந்த பழனிச்சாமி தலையிலே கையை வச்சிட்டு உட்காந்திட்டாரு. இனி என்ன செய்வது? மறுபடியும் எல்லாருகிட்டயும் ஆலோசித்தாரு மறுபடியும் வேலி போட்டாரு. ஆனா அது சாதாரண வேலி இல்லை. அது மின்சார வேலி. யானைக வந்து தொட்டாலே ஷாக்கடிக்கும். இரவு நேரத்திலே மின்சாரம் பாயுறதுக்கான ஸ்விச்சைப் போட்டிருவாரு. யானை வந்து தொட்டாச் ஷாக்கடிக்கும் பயந்து போயயிவிடும் என்று நினைத்தார். அதுக்கான ஏற்பாடும் பண்ணினாரு. யானைக வந்தது. பழனிச்சாமி நினைத்தது மாதிரி வேலியைத் தொட்டது. ஷக்கு அடித்து. பயந்து போனது. ஒரு வாரம் வரவேயில்லை. ஆனா அடுத்து வாரம் யானைக் கூட்டமா வந்தது. வரும் போது சும்மா வரவில்லை. மரத்தடிகளை தூக்கிட்டு வந்தது. மின் வேலியோட தூணை இடித்தது. அடுத்த நாள் பழனிச்சாமி வந்தது பார்த்தபோது வேலிதாறுமாறகச் சிதறிக் கிடக்கு பழனிச்சாமியோட மனசில் மெல்ல மெல்ல ஒரு வெறி வந்திருச்சு. கண்டிப்பா இதற்கொரு முடிவு கட்டியே ஆகணும்ணு நினைத்தார். யானைகளுக்கு விரட்டுறதுக்கு வயலை விட்டு தூர தங்கறது நல்லதில்ல. வயலுக்குப் பக்கத்திலேயே தங்கலாம்ணு முடிவெடுத்து வயலுக்குப் பக்கத்தில் தற்காலத்துக்கு ஒரு குடிசைபோட்டு தங்க முடிவெடுத்தாரு.
ஆனா அப்படித் தங்கத் தொடங்கினபோது அவரோட தூக்கம் போயிருச்சு. ராத்திரியிலே ஒரு சின்னச் சத்தம் கேட்டாலும் யானைக வருதோ அப்படீங்கர சந்தேகத்தில் எழுந்து பார்ப்பார். பெரிய டார்ச் விளக்கை வைத்து அடிச்சுப் பார்ப்பார்.
ஒருமுறை அப்படிப் பார்த்த போது ஐந்து யானைகள் கூட்டமா வருகிறது .அவ்வளவுதான் பழனிச்சாமி துள்ளி எழுந்தாரு. தன்னோட கையிருந்த சரவெடியை எடுத்தாரு. வேலிக்குப் பக்கத்துக்குப் போனாரு அதைக் கொளுத்திப் போட்டாரு.
அது டமார் டமார் ணு ஐந்து நிமிஷம் வெடிச்சது. யானைகள் பயந்து பின் திரும்பி ஓடியது. ஹஹ்.ஹா... ஹஹ்ஹா... ணு மகிழ்ச்சியாக சிரிச்சார். வீட்டுக்கு வந்தா. புள்ளைகளும் மனைவியும் படுக்கையில் திடுக்கிட்டு எழுந்து பழனிச்சாமி வருவதற்காக காத்திட்டிருக்காங்க.
இப்படி இரண்டு மூன்று தடவ நடந்தது. நாலாவது தடவை யானைகளுக்கு புரிஞ்சுபோச்சு. வெறும் சத்தம் மட்டும் கேட்கும். நம்ள ஒண்ணும் பண்ணாதுணு புரிஞ்சு போச்சு. அப்புறம் சரவெடி வெடிச்சாலும் அது போக வில்லை...
இதென்னாட வம்பாப் போச்சேண்ணுண்ணு நினைத்தார். அடுத்த தடவை என்ன பண்றது? இந்தக் கேள்விதான் அவரோட மனசுலே எப்பவும் ஓலிச்சுகிட்டே இருந்தது.
நாளைக்கு யானை வந்தா என்ன பண்றதுண்ணு யோசிச்சுகிட்டே கடைவீதி வழியாக நடந்திட்டிருந்தார். அப்போ நாலைந்து பேரு அங்கிருந்தும் இங்கிருந்தும் ஓடி வந்தாங்க. இரண்டு சாலைக சந்திக்கிற இடத்தில் கூடினாங்க காது கிழியற மாதிரி பறையடிச்சு பாடத் தொடங்கினாங்க...
அட இது பரவாயில்லையே... கடைவீதியில் பறையடிச்சா மக்கள் கூடுவாங்க. இதுவே நம்ம வயலுக்குப் பக்கத்தில் அடிச்சா யானைங்க திடுக்கிட்டு ஓடி விடும் அப்படீண்ணு நினைத்தார்.அவர்களிடம் சொன்னார். அவர்களும் வருவதாக ஒத்துகிட்டாங்க.
அன்றைக்கு இராத்திரி யானைக வருவத்ற்ககாக காத்திருந்தாங்க யானைகள் வந்தது. அவ்வளவுதான் ஐந்து பேரும் எழுந்து அவங்வங்க கையிலிருக்கிற பறையை பலமா அடிக்கத் தொடங்கினாங்க. சட்டுணு பறையடிக்கிற சத்தம் கேட்டு யானைகள் பயப்பட்டு திருப்பி ஓடியது. இரண்டு, மூன்று நாள் வர வில்லை.
நாலாவது நாள் யானைகள் வந்து போனதுக்கான அடையாளத்தைப் பார்த்தாரு. மறுபடியும் அவரேட மனசில் கவலை வந்து ஒட்டியது. அன்றைக்கு சாயங்காலம் அவரோட அண்ணன் பையன் சித்தப்பாவைப் பார்க்க வந்தான். பழனிச்சாமி கவலையாக இருக்கிறதுக்கான காரணத்தைப் புரிஞ்சுகிட்டான். அவன் யோசிச்சான். அவனோட மனசில் ஒரு திட்டம் வந்தது.
இணையதளத்திருந்து புலி உறுமற சத்தத்தை பதிவிறக்கம் செய்தான். இரண்டு ஓலி பெருக்கியை காட்டைப் பார்த்து திருப்பிப் பொருத்தினான். இராத்திரி யானைகள் வரருக்கிற சத்தம் கேட்டதும் புலி உறுமற சத்தத்தை ஓலி பெருக்கியில அலற விட்டான். அவ்வளவுதான் யானைக காட்டைப் பார்த்து குடுகுடுவென ஓடியது.
ஆனா அதுவும் சில நாட்களுக்குத்தான் பயன்பட்டது. மறுபடியும் யானைகள் வந்தது. பழனிச்சாமிக்கு என்ன பண்றதுண்ணே தெரிய வில்லை. வேலி கட்டிப் பார்த்தாரு, மின்சாரம் பாய்ச்சிப் பார்த்தாரு. வெடி வெடிச்சுப் பார்த்தாரு, பறையடிச்சுப் பார்த்தாரு எதுவும் நடக்க வில்லை.. அவருடைய முகத்தில் மகிழ்ச்சியே இல்லை. அதைப் பார்த்த அவரோட மகள் தர்சனா "அப்பா நான் ஒண்ணு கேட்கட்டுமா?'' என்று கேட்டாள்.
நீ என்னம்மா கேட்கப்போறே... நீ புதுசா எதாவது வழி சொல்லப்போறயா? இல்லப்பா. எம் மனசிலே ஒரு சந்தேகம் அதுதான் சரி கேளு...
யானை ஏன் வயல் பக்கம் வருது அதுக்குப் பசிக்குது, சாப்பாடுறதுக்காக வருது அப்ப காட்டில் அதுக்கான சாப்பாடு கிடைக்கிறதில்லை அப்படீத்தானே ஆமா அப்ப யானைகளுக்கு நாம வேற சாப்பாடு போட்டா நம்ம பயிர்களை அழிக்காதில்லையா?
அட, ஆமா... ஆனா இல்லைப்பா இந்த பூமி அவங்களுக்கும் சொந்தானேப்பா... கொஞ்சம் தென்னை ஓலைகளை, கரும்பு தோகைகளையோ யானைகள் வருக்கிற வழியில் போட்டுப் பாருங்க அது வராது.
பழனிச்சாமி அடுத்தநாள் மகள் சொன்ன மாதிரி செய்தார். என்ன ஆச்சரியம் அது சாப்பிட்டுட்டு போய் விட்டது. மட்டுமல்ல யானைகளை எதிரிகளாநினைக்காமல் அதுகளுக்கும் இந்தப் பூமி சொந்தம்ணு நினைத்தனாலேயோ என்னமோ அதுக்கப்புறம் பழனிச்சாமியோட பயிர்களை யானை ஆழிக்கவே இல்லை.
பழனிச்சாமியால் இப்போ நிம்மிதியா தூங்க முடியுது. |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|