LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....

தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்த காக்கா முட்டை திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. வெளியானது முதல் இதுவரை சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காக்கா முட்டை படம் ரிலீஸ் ஆன போது பல ஊர்களில் மினி தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆனது. சனி, ஞாயிறு என இரண்டு விடுமுறை நாட்களிலும் படத்திற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து தமிழகத்தின் பல ஊர்களில் பெரிய தியேட்டரில் படம் திரையிடப்பட்டது. முதல் மூன்று நாட்களில் வசூல் அதிகரித்ததை அடுத்து தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வரும் நாட்களில் காக்கா முட்டையின் வசூல் ஒரு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கும் காக்கா முட்டை படத்தின் தயாரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? வெறும் 80 லட்சம் தான். இந்த படத்தின் தற்போதைய நிலவரப்படி சுமார் 8 கோடி ரூபாயை தமிழகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. படத்தின் சேட்டிலைட் உரிமையை விற்றவகையில் 1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. திரைப்பட விழாக்களில் படத்தை திரையிட்ட வகையில் சில கோடிகளை ஏற்கனவே சம்பாத்துக் கொடுத்துவிட்டது காக்கா முட்டை. இது தவிர பிற மொழி உரிமையை விற்கும்போதும் சில கோடிகள் கிடைக்கும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது காக்கா முட்டை சுமார் 15 கோடியை லாபமாக கொடுக்கும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

by CinemaNews   on 11 Jun 2015  1 Comments
Tags: Kakka Muttai   Kaakka Muttai   Kakka Muttai Box Office   Kakka Muttai Vasol   Kakka Muttai Record   Kakka Muttai Collection   காக்கா முட்டை  
 தொடர்புடையவை-Related Articles
தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி.... தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....
உலகத்திரைப்பட விழாவில் காக்கா முட்டை திரைப்படம் !! உலகத்திரைப்பட விழாவில் காக்கா முட்டை திரைப்படம் !!
கருத்துகள்
20-Jun-2015 04:49:21 கண்ணன் said : Report Abuse
இந்த பெருமை டைரக்டர் உடையது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.