LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1286 - கற்பியல்

Next Kural >

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.
தேவநேயப் பாவாணர் உரை:
காணுங்கால் தவறாய காணேன்-கணவரை யான் காணும்பொழுது அவர் தவறுகளை ஒரு சிறிதுங் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறு அல்லவை காணேன்-அவரைக் காணாத பொழுதோ அத்தவறுகளையல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன். முன்பு நான் சொன்ன அவருடைய தவறுகளை இதுபோது காணாமையாற் புலந்திலேன் என்பதாம் . கொண்கனை என்னுஞ் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்தது.
கலைஞர் உரை:
அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.
Translation
When him I see, to all his faults I 'm blind; But when I see him not, nothing but faults I find.
Explanation
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
Transliteration
Kaanungaal Kaanen Thavaraaya Kaanaakkaal Kaanen Thavaral Lavai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >