LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

காதற் குதிரையும் அழுக்குப் பொதிசுமக்கும் கழுதைகளும்

நாணல்கள் எரிந்தனதான்
நாம் விட்ட பெருமூச்சு காடுகளும் எரிய
தீயாகிக் கொண்டதுதான்,
என் தேவீ!
என் இதயப் பசுந்தரையில் மேய்ந்த சிறுகுருவி!
வேதனையின் வலைக்குள்ளே நாங்கள் அகப்பட்டோம். 
உன் நுனிமூக்கில் தெரிகின்ற செந்நிறத்து மூக்குத்தி
இனியெந்த மதன்முகத்தைக் கிழிக்கும்?
என் கன்னத்தை அது கிழிக்கும்
காயங்கள் அதால் தோன்றும். 
காயத்தை உனது விரல் தடவும், உடனடியாய் ஆறும்
என்றெல்லாம் இரவுகளில்தான் நினைத்தேன்.
அந்தச் செந்நிறத்து மூக்குத்தி என் முகத்தைக் கிழிப்பதற்கு 
உன் மூக்கும் தவிக்கையிலே முயற்சி பிழைத்தது பார். 
இது நுனிநாக்குக் காதலல்ல. 
குட்டி நாக்கிலுமே சொற்பிறந்து சரசங்கள்
பொழிந்த காதல்தான், பிறை நெற்றி கண் மீன்கள்
என்று வர்ணிக்கத் தெரியாத கவிஞனிவன்,
உன் மனதை வர்ணித்தேன் மாளிகையை நானமைத்தேன்
ஒரு புறா வந்து உறங்காமல் துப்பரவாய் கவனித்தேன்
பார் 
வேதனையின் வலைக்குள்ளே நாங்கள் அகப்பட்டோம்.
உன் செந்நிறத்து மூக்குத்தி, குதியுயர்ந்த செருப்பு
ஆங்கில வார்த்தைகள் "வெரிநைஸ்" உங்கள் கவி
என்ற பாராட்டு அத்தனையும் உயிர்பெற்று
இப்பொழுது என் பின்னால் வரவர கனவுகளில்
பாம்பு கடிக்கிறது, வெள்ளியுமே கருகி
என்மீது விழுகிறது, நீ....
காதற் குதிரையிலிருந்தும் விழுந்தோம்.
நம் பெயரால் அழுக்குப் பொதிசுமந்து
மனிதக் கழுதைகள் திரிகிறதே கண்ணே!

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.