லிங்கா படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கபாலி. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, பா.இரஞ்சித் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார்.
ரஜினிகாந்துடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கபாலி படத்தின் டீசர் நேற்று வெளியானது. கபாலி டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினியின் ரசிகர்கள், திரையுலகினர் எனப் பலரும் கபாலி பட டீசரை பகிர்ந்தார்கள்.
ராம்கோபால்வர்மா, ராஜமௌலி உள்ளிட்ட இயக்குநர்களும் கபாலி படத்தின் டீசரை பாராட்டி தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமான பேர் கபாலி டீசரை பார்த்துள்ளார்கள். இது, இந்திய அளவில் எந்தவொரு நடிகருக்கும் இல்லாத வரவேற்பு. மேலும், ஆசிய அளவிலும் ஒரு சாதனையாக மதிப்பிடுகிறது.
|