நடிகர் அஜீத் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்துக்கு வில்லனாக கபீர் சிங் என்ற பாலிவுட் நடிகர் நடிக்கிறார். கபீர் சிங் நடிக்கும் முதல் தமிழ் படம் இது. இப்படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்ள சில நாட்களுக்கு முன் சென்னை வந்துள்ளார் கபீர். அஜீத்துடன் பழக ஆரம்பித்தவுடனேயே அவரைப் பற்றி புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரைப் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.
அந்த பதிவில், இப்போதுதான் அஜீத் சாரை சந்தித்தேன் வாவ்... அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அவர் ஒரு நிஜமான ஜென்டில்மேன். சிறந்த மனித நேயம் மிக்கவர். அவர் ஒரு வைரம், நிஜமான ஹீரோ. ஒழுக்கத்தின் மனிதர், உதவும் குணம் கொண்டவர். அவரைப் பொறுத்தவரையில் யாருடனும் பாகுபாடு இல்லாமல் அனைவருடனும் சகஜமாக பழகுவார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அவர். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய அறிமுக வாய்ப்பைக் கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் அஜீத் சார்.
|