|
||||||||
கைச்சிலம்பாட்டம் |
||||||||
காலில் அணியும் சத்தமுடன் ஒலிக்கும் சிலம்புகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு ஆடும் கலை கைச்சிலம்பாட்டம் எனப்படும். சிலம்பு என்ற இசைக்கருவியைக் கைகளில் வைத்திருப்பதால் இது கைச்சிலம்பாட்டம் என்ற பெயர் பெற்றது. இவ்வாட்டமானது திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தருமபுரி, தென் ஆற்காடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்படுகிறது. காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை பகுதிகளில் பெருமளவிலும், தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இக்கலையை ஆண்கள் மட்டுமே நிகழ்த்துகின்றனர். |
||||||||
by Swathi on 24 Sep 2013 2 Comments | ||||||||
Tags: கைச்சிலம்பாட்டம் கைச்சிலம்பு Kaiyurai Paavai Kai Silambattam | ||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|