|
||||||||
ககர ஒகர வருக்கம் |
||||||||
கொடிறெனும் பெயரசுரர் குருவி னாளுங்
கவுளியின் பெயருங் கருவிப் பற்றுமாம். ....584
கொக்கெனும் பெயரே குதிரையு மூலமும்
பேகமுஞ் செந்நாயு மாமரமும் பேசுவர். ....585
கொன்னெனும் பெயரே ஓரசைச் சொல்லும்
பெருமையுங் காலமும் வறிது மச்சமும்
பயனி லாததும் பகருவர் புலவர். ....586
கொற்றி யெனும்பெயர் கோவிளங் கன்றும்
துர்க்கையுங் கொத்தியுஞ் சொல்லப் பெறுமே. ....587
கொண்மூ வெனும்பெயர் மேகமா காயமுமாம். ....588
கொந்தள மெனும்பெயர் கோதையர் மயிரும்
குருளையுங் கருங்குழற் கொத்து மாமே. ....589
கொடிய னெனும்பெயர் கொடியவன் பெயரும்
கேதுவின் பெயருங் கிளர்த்தப் பெருமே. ....590
கொம்மை யெனும்பெயர் கொங்கையும் பெலமும்
இளமையும் அங்கை குவித்துக் கொட்டலும்
வட்ட வடிவுந் திடரும் வழங்குவர். ....591
கொண்டை யெனும்பெயர் இரந்தையின் கனியும்
மயிர்முடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....592
கொற்ற மெனும்பெயர் அரசியற் பெயரும்
வெற்றியின் பெயரும் விளம்புவர் புலவர். ....593
கொல்லெனும் பெயர்கொலை யேவலு மசைச்சொல்லும்
ஐயமும் வருத்தமும் செங்கொல்லும் கருங்கொல்லும். .... 594
கொடியெனும் பெயரே யொழுங்கும் வல்லியும்
துவசமுங் காக்கையின் பெயருஞ் சொல்லுவர். ....595
கொடிறெனும் பெயரசுரர் குருவி னாளுங் கவுளியின் பெயருங் கருவிப் பற்றுமாம். ....584
கொக்கெனும் பெயரே குதிரையு மூலமும் பேகமுஞ் செந்நாயு மாமரமும் பேசுவர். ....585
கொன்னெனும் பெயரே ஓரசைச் சொல்லும் பெருமையுங் காலமும் வறிது மச்சமும் பயனி லாததும் பகருவர் புலவர். ....586
கொற்றி யெனும்பெயர் கோவிளங் கன்றும் துர்க்கையுங் கொத்தியுஞ் சொல்லப் பெறுமே. ....587
கொண்மூ வெனும்பெயர் மேகமா காயமுமாம். ....588
கொந்தள மெனும்பெயர் கோதையர் மயிரும் குருளையுங் கருங்குழற் கொத்து மாமே. ....589
கொடிய னெனும்பெயர் கொடியவன் பெயரும் கேதுவின் பெயருங் கிளர்த்தப் பெருமே. ....590
கொம்மை யெனும்பெயர் கொங்கையும் பெலமும் இளமையும் அங்கை குவித்துக் கொட்டலும் வட்ட வடிவுந் திடரும் வழங்குவர். ....591
கொண்டை யெனும்பெயர் இரந்தையின் கனியும் மயிர்முடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....592
கொற்ற மெனும்பெயர் அரசியற் பெயரும் வெற்றியின் பெயரும் விளம்புவர் புலவர். ....593
கொல்லெனும் பெயர்கொலை யேவலு மசைச்சொல்லும் ஐயமும் வருத்தமும் செங்கொல்லும் கருங்கொல்லும். .... 594
கொடியெனும் பெயரே யொழுங்கும் வல்லியும் துவசமுங் காக்கையின் பெயருஞ் சொல்லுவர். ....595
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|