|
||||||||
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது. |
||||||||
கலா மஞ்சரி லிஷா பொங்கல் திருவிழா, தமிழ் மொழி விழா, நற்பணி சமூக குதூகலம் ஆகியவற்றில் பங்குப் பெற்று உள்ளது. தமிழ் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆத்திச்சூடி, கடையேழு வள்ளல்கள் போன்ற நிகழ்ச்சிகளை படைத்துள்ளது. மேலும், நாட்டுப்புற இசையை பற்றிய கருத்தரங்கையும் நாட்டுப்புற இசை பற்றிய பன்னாட்டு கருத்தரங்கத்தையும் இணையம் வழி நடத்தியது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை சிங்கப்பூரில் படைத்துள்ளது. கலாமஞ்சரி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் தமிழ் சான்றோர்களான திருவள்ளுவர், மகாகவி பாரதியார், பாரதிதாசனார், ஒவ்வையார் போன்றோரின் உருவப் படங்களை ஐஸ் க்ரீம் குச்சிகளில் வரைந்து 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டு சென்னை தமிழ் இசை சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டது. அதன்படி, தமிழ் இசை சங்கம், கலாமஞ்சரியின் மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி வருகிறது. 21.8.2024 அன்று சென்னையில், 21.8.2024 அன்று, தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டது. அதன் மூலம், கலாமஞ்சரியின் மாணவர்களுக்கு, வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு, பல்கலைக்கழகம் சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்பிற்கானத் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்கும்.
படம்: பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமதி: செளமியாவுடன கலாமஞ்சரியின் நிறுவனர் திருமதி: செளந்தர நாயகி வயிரவன்
|
||||||||
| by Swathi on 29 Aug 2024 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|