|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 11 : புதுமைப்பித்தன் |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர்
படம் வெளியான நாள் 2-8-1957. எம்.ஜி.ஆர்., டி ஆர் ராஜகுமாரி,பி எஸ் சரோஜா, சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். டி ஆர் ராமண்ணா இயக்கம். கலைஞர் கதை வசனம். தன் சகோதரனின் பதவி ஆசையால் அரசன் கைதாகிறான்.அவன் இறந்து விட்டதாகவும் வதந்தியைப் பரப்புகிறான் சகோதரன்.அந்நாட்டு இளவரசனோ வெளிநாடு சென்றுள்ளான். அவன் திரும்பி வருகையில் மன்னன் இறந்து விட்டான் என செய்யப்படும் போலி இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறான்.ஆனால், அப்போது அவனுக்கு ரகசிய செய்தி ஒன்று வருகிறது. மன்னன் இறக்கவில்லை என்பதே அது. ஆனால்..அந்த செய்தியைத் தருவது ஆண் வேடமிட்ட பெண் ஒருத்தி.அப்பெண்ணை இளவரசன் விரும்புகிறான். இதனிடையே, மன்னனின் சகோதரன் இளவரசனையும் அழிக்க முயல,நாடகங்கள் நடத்திவரும் ஒரு பெண், இளவரசனுக்கு உதவுவதுடன், அவன் மீது காதலும் கொள்கிறாள்.கடைசியில் தன் காதலைத் தியாகம் செய்கிறாள்.இளவரசன் காக்கப்பட்டு வில்லன் அழிகிறான். இளவரசனாக எம் ஜி ஆர்., அவன் காதலியாக பி எஸ் சரோஜா,நாடகப் பெண்ணாக டி ஆர் ராஜகுமாரி, மன்னனின் சகோதரனாக பாலையா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி ராமநாதன் இசையில் ஜிக்கி பாடிய "அழகைப்பார்" ஜெயராமன், ஜிக்கி பாடிய "உள்ளம் இரண்டும் ஒன்னு" பி சுசீலா வின் "தேன் மதுவை வண்டினம்" தில்லானா பாட்டுப் பாடணும் எனசந்திரபாபுவின் பாட்டு ஆகியவை இன்றும் மனதை விட்டு அகலாதவை.
தொடரும்..... |
||||||||
![]() |
||||||||
ரங்கோன் ராதா | ||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|