|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 13 : அரசிளங்குமரி |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர் படம் வெளியான நாள் 1-1-1961.
எம் ஜி ஆர்., பத்மினி, நம்பியார், ராஜ சுலோசனா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஏ எஸ் ஏ சாமி இயக்கினார்..படத்தின் பெரும்பகுதி எடுத்து முடித்த நிலையில் அவர் விலக ஏ காசிலிங்கம் இயக்கி, படத்தை முடித்தார்.
ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு.
கதை வசனம் கலைஞர்.
அறிவழகனின் சகோதரி அன்புக்கரசி. அன்புக்கரசி, வெற்றிவேலனைக் காதலிக்கிறாள்.அவன், அரசவையில் பொறுப்பான பதவியில் இருந்தாலும், தான் ஒரு சாதாரண குடிமகன் என்று சொல்லி அவளை மணக்கிறான்.
சகோதரியின் திருமணத்திற்குப் பின்...வெளியூர் சென்று விடுகிறான் அறிவழகன்.
அன்புக்கரசிக்கு குழந்தை பிறக்கிறது.குழந்தையையும், மனைவியையும் விட்டுப் பிரியும் வெற்றிவேலன், அரசை கைப்பற்ற திட்டமிடுகிறான் .
அதை அறிவழகன் முறியடிக்கப் பார்க்கிறான்.அன்புக்கரசி, தன் சகோதரனுக்கு எதிராகவும், தன் கணவனுக்கு ஆதரவாகவும் இருக்கிறாள்.
முடிவில்...சுபமாய் அனைத்தும் நடந்து முடிகிறது.
அறிவழகனாக எம் ஜி ஆரும், அன்புக்கரசியாக பத்மினியும், வெற்றிவேலனாய் நம்பியாரும் நடித்திருந்தனர்.
ஜி ராமனாதன், இசையில்..பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருந்த "சின்னப் பயலே..சின்னப் பயலே சேதி கேளடா" இன்றும் எவராலும் மறக்க முடியாத பாடலாக அமைந்துவிட்டது.
எம் ஜி ஆரும்..நம்பியாரும் படிக்கட்டில் போடும் கத்திச்சண்டை மட்டும் எடுத்து முடிக்க ஒரு வருடமானதாம்.
மொத்த படபிடிப்பும் முடிய ஐந்து வருடங்கள் ஆனதாகத் தெரிகிறது.
தொடரும்..... |
||||||||
![]() |
||||||||
ரங்கோன் ராதா | ||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|