|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 15 : இருவர் உள்ளம் |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர்
படம் வெளியான நாள் 29-3-1963. இயக்கம் எல் வி பிரசாத்.
எழுத்தாளர் லட்சுமி எழுதிய பெண்மனம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்.
திரைக்கதை, வசனம் கலைஞர்.
சிவாஜி, சரோஜா தேவி,எம் ஆர் ராதா,ரங்காராவ் ஆகியோர் நடித்திருந்தனர்.
சிவாஜி ஒரு பிளேபாய்.பணக்காரர்.பல பெண்களுடன் உறவு வைத்திருப்பர்.
அப்படிப்பட்டவர் வாழ்வில் ,ஒருநாள், ஏழை டீச்சர் சரோஜா தேவியைப் பார்க்கிறார் .அவளை மணக்க விரும்புகிறார்.சரோஜாதேவியும் ஆசையுடன் மணப்பார் என எதிர் பார்க்கிறார்.ஆனால் இவர் இசையவில்லை.
தன் பணத்தால் , அவர் பெற்றோர்களிடம் பேசி அவரையே மணக்கிறார் சிவாஜி திருமணத்திற்குப் பின் அவர் நல்லவராக மாறினாலும், டீச்சர் அதை ஏற்கவில்லை.
இதனிடையே, சிவாஜி மாறியதையும், த்ன்னை மட்டுமே விரும்புவதையும் சரோஜா தேவி அறியும் போது, சிவாஜி ஒரு கொலை பழியில் சிக்குகிறார்.
அவர் மீண்டு வருவதும், இருவரும் ஒன்று சேருவதுமே மீதிக் கதை.
இப்படத்தில் எம் ஆர் ராதா..ஒரு மாறுபட்ட நகைச்சுவை வேடத்தில் வந்து, டி பி முத்துலட்சுமியுடன் சேர்ந்து கலக்குவார்.
இப்படத்தின் சில காட்சிகளுடன், மீண்டும் சிவாஜி, சரோஜாதேவியை வயதானவர்களாக சமீபத்தில் வந்த ஒன்ஸ்மோர் படத்தில் காட்ட்ப்பட்டது.
கே வி மகாதேவன் இசையில் அனைத்துப் பாடல்களும் தேன்.பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்.
பறவைகள் பலவிதம் கண்ணெதிரே தோன்றினாள் இதய வீணை தூங்கும் போது நதி எங்கே போகிரது அழகு சிரிக்கிறது ஏன் அழுதாய் ஏன் அழுதாய்
மேற்சொன்ன பாடல்களை டி எம் சௌந்தரராஜனும்,சுசீலாவும் பாடினர்.
ஏ எல் ராகவன் , ராதாவிற்காக பாடிய "புத்தி சிகாமணி" பாடலும் சிறப்பு.
தனது சாதாரண குடும்பப்பாங்கான வசனங்கள் மூலமும் கலைஞர் வெற்றி பெற்றார்.
தொடரும்.....
|
||||||||
![]() |
||||||||
ரங்கோன் ராதா | ||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|