|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 3 : பணம் |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர் 1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் நாள் வந்த படம் "பணம்" பராசக்தி வெளியாகி இரண்டே மாதத்தில் வந்த படம்..ஏ எல் ஸ்ரீனிவாசன் தயாரிக்க என் எஸ் கே இயக்கத்தில் கலைஞர் திரைக்கதை வசனத்தில் வந்த படம் பேராசைப் பிடித்த பணக்காரனுக்கு ஒரே மகன்.அவன் ஏழைப் பெண்ணை மணக்கிறான்.அவள், வரதட்சணை கொண்டு வராததால் பணக்காரனால் வீட்டை விட்டு துரத்தப் படுகிறாள்.அவளைக் காப்பாற்றுபவன் அவளை ஒரு மாளிகையில் அடைத்து வைக்கிறான்.இதனி டையே, அந்தப் பணக்காரன் தன் மகனுக்கு வேறு ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்கிறான்.ஆனால், அவளோ திருமணத்தன்று இரவு, தான் வேறு ஒருவனைக் காதலித்ததாகக் கூறி வெளியேறுகிறாள்.
இந்நிலையில், கதாநாயகி அடைத்து வைக்கப் பட்டுள்ள மாளிகையில் ஒரு கொலை நடக்கிறது.கதாநாயகன் கைதாகிறான்.உண்மைக் குற்றவாளி யார்..அவன் கைதானானா, கதாநாயகன் விடுவிக்கப் பட்டானா, கணவன் ;மனைவி இணைந்தனரா..என்பதே மீதிக் கதை.
கலைஞரின் வசனங்கள் இப்படத்திலும் பாராட்டப்பட்டன.
கண்ணதாசன் பாடல்களை இயற்றினார்.
ஒரு பாடல்..என்.எஸ் கே பாடிய :தினா மூனா கானா" என்ற பாடல்.தணிக்கை அதிகாரிகளுக்காக ''அது "திருக்குறள் முன்னேற்ற கழகம்" எனப் பாடப்பட்டது.
இப்படம் இரண்டு மாதங்கள் முன்னர் வந்திருந்தால் சிவாஜியின் முதல் படமாக இது அமைந்திருக்கும்.
சிவாஜி, பத்மினி, என் எஸ் கே., மதுரம், எஸ் எஸ் ஆர்., வி கே ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர்.
தொடரும்.....
|
||||||||
![]() |
||||||||
ரங்கோன் ராதா | ||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|