|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 4 : திரும்பிப்பார் |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர்
பராசக்தி என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த கூட்டணியிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்தது "திரும்பிப்பார்" படம் வெளியான நாள் 10-7-1953.
இதில் சிவாஜி வில்லன் (என்ன ஒரு தைரியம்)
முழுக்க முழுக்க அயோக்கியன்.ஆனால், அழகான, திறமையான,புத்திசாலியான வில்லன், பரந்தாமன் (சிவாஜி) ஒரு பெண்பித்தன் தன் அக்காள் (பண்டரிபாய்) வளர்த்து வருகிறாள்.பல பெண்களை ஏமாற்றி,தொழிலாளர்களை சுரண்டி, பிறர் எழுதும் கதைகளை தன் பெயரில் போட்டு....இப்படி அவரது கொடுமையான செயல்களுக்கு அளவே இல்லை.
இவனுக்கு நேர் எதிர் பாண்டியன் (நரசிம்ம பாரதி).
பரந்தாமன், அவனது அக்காள், பாண்டியன் இவர்களுக்குள் ஏற்படும் முரண்பாடு, மோதல்கள் இதுதான் கதை.
ஆரம்பமே கோர்ட் சீன்.பரந்தாமனைக் கொன்றதாக பாண்டியன் குற்றவாளிக் கூண்டில்.அவன் குற்றவாளி யில்லை என பண்டரிபாய் வாதாடுகிறாள்.படம்...பின்னோக்கி(ஃபிளாஷ் பேக்) செல்கிறது.
வசனம் முழுதும் இப்படத்தில் ஹியுமரிலேயே செல்லும்.
அந்த நாட்களில் நேரு தி முக வினரை ஒருசமயம் நான்சென்ஸ் என விமரிசித்தார்.இதை வைத்து, நேருவைப் போலவே கருப்பு கண்ணாடி, சூட் அணிந்து சிவாஜி வருவார்.அடிக்கடி நான்சென்ஸ் என்பார்.
ஒருகாட்சியில் தொழிலாளி ஒருவன் சம்பளம் கேட்டு வருவான்.அதற்கு நான்சென்ஸ் என்பார் சிவாஜி.
கருடன் பதிப்பக உரிமையாளர் துரைராஜ்..அவர், பரந்தாமா நீ புத்தகம் எழுது.வரும் லாபத்தில் முக்கால் எனக்கு கால் உனக்கு என்பார்.
அப்போது தொழிலாளி "எனக்கு" என்பார்.
அவனுக்குக் கால் உனக்கு அறை (என தொழிலாளி கன்னத்தில் அடிப்பார்).
பராசக்தி போலவே குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் நிறபார் சிவாஜி (பராசக்தி எஃபெக்டில் வசனம் பேசப்போகிறார் என மக்கள் இருக்கையின் நுனிக்கு வருவார்கள்)ஆனால் இவரோ..இந்த குற்றச்சாட்டுத் தவறு.உண்மையாய் இருந்தால் என்னை மன்னிக்கவும் என முடித்துக் கொள்வார்.
இப்படத்திற்கு இசை ஜி ராமநாதன்.
ஜிக்கி பாடிய ஆனா டுனா ஆடு, எஸ் சி கிருஷ்ணன் பாடிய "கலப்பட கலப்படம்", திருச்சி லோகநாதன், பி.லீலா பாடிய கண்ணாலே பண் பாடும் ஆகிய பாடல்கள் இனிமை.
பண்டரிபாய் பேசும் வசனங்களும், சிவாஜி பேசும் வசனங்களும் படத்தின் ஹைலைட் எனலாம்..
பெண்பித்தனான பரந்தாமனிடம்..உனக்கு ஒரு பெண்தானே வேண்டும் நான் இருக்கிறேண் என் அக்காள் கூறுவதும்..
பின்னர் தவறுணர்ந்த பரந்தாமன்..
தன்னைத் தானே திட்டிக் கொள்வதும்..
"ஏ..மானிட இனமே ..நீ குரங்கிலிருந்து வந்தாயாம்..குரங்கு மனப்பானமை உனக்குக் குறைந்துவிட்டதா என திரும்பிப்பார்.. என பேசும் வசனங்களும் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பது வசனகர்த்தாவின் சிறப்பின்றி வேறு என்ன..
தொடரும்.....
|
||||||||
![]() |
||||||||
ரங்கோன் ராதா | ||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|