|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 5 : நாம் |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர்
கலைஞரின் 10ஆவது படம் நாம். 5-3-1953 ல் வந்த படம். ஜூபிடெர் பிக்சர்ஸும், மேகலா பிக்சர்ஸும் இணைந்து தயாரித்த படம் நாம். கலைஞர் திரைக்கதை, வசனம். இயக்கம் ஏ காசிலிங்கம். (மேகலா பிக்சர்ஸில் கலைஞர், பத்திரிகையாளர் ராஜாராம் என்பவர், எம் ஜி ஆர்., ஜானகி ஆகியோர் பங்குதாரர்கள்). குமரன் ..முற்போக்குக் கொள்கைகள் கொண்டவன்.இளைஞன்.அவன் தாயார் இறக்கையில் தான், அவன் பணக்காரன் என்றும் எஸ்டேட் முதலாளி என்றும் தெரிய வருகிறது.மலையப்பன் என்பவனால் அனைத்தும் மறைக்கப்படுகிறது ஆனால், மலையப்பனின் சகோதரி மீனாவை குமரன் விரும்புகிறான்.ஆனால்..சஞ்சீவி என்னும் மருத்துவர் ஒருவர் குமரனுக்கு தன் மகளை திருமணம் செய்வித்து, அவனது சொத்தை அடைய நினைக்கிறார். சொத்து சம்பந்தமான உயில் குறித்து, மீனா மீது சந்தேகம் ஏற்பட..குமரன் ஊரை விட்டு செல்கிறான். இதனிடையே...குமரன் ஒரு குத்துச் சண்டை வீரனாகிறான்.ஒரு சண்டையின் போது முகத்தில் அடிபட்டு..அவன் முகம் மாற,,வெளியில் தலைகாட்டுவதைத் தவிர்த்து..இரவில் உலாவும் அவனை மக்கள் பேய் என பயப்படுகின்றனர். கடைசியில் உண்மை வெளிவந்து..காதலர்கள் ஒன்று சேருகின்றனர், குமரனாக எம் ஜி ஆரும், மீனாவாக ஜானகியும், மலையப்பனாக பி எஸ் வீரப்பாவும், மருத்துவராக எம் ஜி சக்ரபாணியும் நடித்தனர். சிதம்பரம் ஜெயராமன் இசையமைத்துள்ளார். ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பதே உண்மை.
தொடரும்..... |
||||||||
![]() |
||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|