|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 8 : ராஜா ராணி |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர்
வெளியான நாள் 26-2-1956.
சிவாஜி,பத்மினி,எஸ் எஸ் ராஜேந்திரன், , என் எஸ் கிருஷ்ணன் மதுரம், கலைஞர் கதை வசனம். கண்பார்வையற்றவரின் பெண் ராணி.அவருக்கு பாபு என்பவன் நடத்தும் நாடகக் கம்பெனியில் டிக்கெட் விற்று வரும் பணத்திற்கு பொறுப்பாளர்.வேலை.
ஒருநாள் நாடகத்திற்கான வசூல் பணம் முழுதும் திருடுப் போகிறது.இதைப் பயன்படுத்தி பாபு, ராணியிடம் தவறாக நடக்க முயலுகிறான்.தப்பி ஓடும் ராணி,ராஜாவின் காருக்குள் புகுந்து கொள்கிறாள்.
அந்த நேரத்தில் லீலா என்ற பணக்காரப் பெண் ஒருவர் வீட்டை விட்டு ஓடி விட்டார் என்ற செய்தியை ராஜா படிக்கிறான் .ராணியை..ராஜா லீலா என எண்ணுகிறான்.ராணியும், அப்படியே அவனிடம் நடிக்கிறாள்.
ராஜா, ஒரு நாடகக் குழு ஆரம்பிக்க, லீலா என்ற பெயரிலேயே ராணி அதில் நடிக்கிறாள்.
சாக்ரடீ ஸ் நாடகம் நடக்கிறது.அதில்..சாக்ரடீஸிற்கு பாபு உண்மையான விஷத்தைக் கலந்து விடுகிறான்.
ராஜா தப்பித்தானா...ராணியை மணக்கிறானா..என்பதே மீதக் கதை.
சிவாஜி, பத்மினியின் சிறந்த நடிப்பு .சேரன் செங்குட்டவன் என்ற நாடகம் 12 நிமிடங்கள் படத்தில் வருகிறது.சிவாஜி,எஸ் எஸ் ஆர்.,நடிப்பு, கலைஞரின் வசனம் ..இன்றும் பேசப்படுகிறது.
டி ஆர் பாப்பா வின் இசையில் ,எம் எல் வி பாடிய வாங்க வாங்க இன்றிரவு, சீர்காழி கோவிந்தராஜன், ரத்னம் பாடிய பூனைக்கண்ணை மூடிக் கொண்டால் இன்ப நன்னாள் இதே (எழுதியவர் கலைஞர் பாடியவர் எம் எல் வி). புது மணிப்புறா (எம் எல் வி)
ஆகிய பாடல்கள் சிறப்பு
எல்லாவற்றிலும் மணிமகுடமாக என் எஸ் கே., மதுரத்தின் குரலில் பலவிதமான சிரிப்புகள் பற்றிய மருதகாசி எழுதிய பாடல் அமைந்தது.
:"சிரிப்பு...இதுதான் சிரிப்பு.
தொடரும்..... |
||||||||
![]() |
||||||||
ரங்கோன் ராதா | ||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|