|
||||||||
கலைஞர் என்னும் கலைஞன் - 9 : ரங்கோன் ராதா |
||||||||
![]() டி.வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர், நாடகக் கலைஞர்
அண்ணாதுரையின் கதைக்கு கலைஞரின் வசனத்தில் வந்த படம் ரங்கோன் ராதா.
வெளியான நாள் - 1-11-1956.
கோட்டையூர் தர்மலிங்க முதலியார் வக்கிர எண்ணங்களைக் கொண்டவர்.தன் மனைவியின் சகோதரி மீது அவருக்கு ஆசை.அவளை மணமுடிக்க எண்ணுகிறார்.அத்ற்காக தன் மனைவிக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி அவளை பைத்திய நிலைக்கு ஆளாக்குகிறார்.
கடைசியில் அவர் சுயரூபம் வெளியாகிறது.
மேகலா பிகசர்ஸ் தயாரித்த இப்படத்தை ஏ காசிலிங்கம் இயக்கினார்.
டி ஆர் பாப்பா இசையில்பாரதியார்,பாரதிதாசன் பாடல்களுடன், உடுமலை நாராயண கவி,எம்,கே ஆத்மநாதன்,பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம், கலைஞர் ஆகியோர் பாடல்கள் எழுதினர்.
சிவாஜி கணேசன், த்ர்மலிங்க முதலியாராக ஒரு நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார்.அவர் மனைவியாக பானுமதி, மைத்துனியாக எம் என் ராஜமும் மற்றும் எஸ் எஸ் ராஜேந்திரன், ராஜசுலோச்சனா ஆகியோர் நடித்தனர்.
மந்திரவாதியாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார்.
முத்துராமன், வக்கீலாக ஒரு சிறு வேடத்தில் இப்படத்தில் வந்தார். தொடரும்..... |
||||||||
![]() |
||||||||
ரங்கோன் ராதா | ||||||||
by Swathi on 25 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|