|
||||||||
கலவைக்கீரைக் கூட்டு |
||||||||
தேவையானவை 1. பாசிப்பருப்பு - ஒரு கப் 2. தேங்காய்த்துருவல் - ஒரு சிறிய கப் 3. காய்ந்த மிளகாய் - ஒன்று 4. முருங்கைக்கீரை, அரைக்கீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கன்னிக்கீரை, அகத்திக்கீரை - தலா ஒரு கைப்பிடியளவு 5. உப்பு - தேவையான அளவு தாளிக்க : 1. கடுகு, உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன் 2. சீரகம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் 3. பெருங்காயத்தூள் - சிறிதளவு செய்முறை : 1. அனைத்து கீரைகளையும் ஆய்ந்து சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டவும்.
2. பின்னர் பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். பாசிப்பருப்பையும் குழைய வேகவைத்து வெந்து கொண்டிருக்கும் கீரையுடன் சேர்க்கவும்.
3. தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் இரண்டையும் ஒன்றாக மிக்சியில் போட்டு, நைசாக அரைத்து கீரையுடன் சேர்க்கவும்.
4. பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொட்டி கலந்து.
5. ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். |
||||||||
by Swathi on 17 Jul 2014 0 Comments | ||||||||
Tags: கலவைக்கீரைக் கூட்டு Kalavai Keerai Kootu | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|