LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 870 - நட்பியல்

Next Kural >

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
தேவநேயப் பாவாணர் உரை:
கல்லான் வெகுளும் சிறு பொருள் ஒல்லானை - அரசியல் நூல் அறியாதவனைப் பகைத்தால் வரும் எளியவழிப் பொருளோடு பொருந்தாதவனை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது-ஒரு போதும் புகழ் பொருந்தாது. ’சிறுபொருள்’ சிறுமுயற்சியால் வரும் பொருள். சிறு முயற்சியே செய்யமாட்டாதவன் ஒருகாலும் பெருமுயற்சி மேற்கொள்ளானாகலின் ’எஞ்ஞான்றும் .... ஒல்லா தொளி’ என்றார். ஒளி என்பது வாழ்நாட்காலத்து இசை.
கலைஞர் உரை:
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
Translation
The task of angry war with men unlearned in virtue's lore Who will not meet, glory shall meet him never more.
Explanation
The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).
Transliteration
Kallaan Vekulum Siruporul Egngnaandrum Ollaanai Ollaa Tholi

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >