|
||||||||
கல்லும் மலையும் குதித்து வந்தேன் -கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை |
||||||||
கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங் காடும் செடியும் கடந்து வந்தேன்; எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.
ஆயிரம் காலால் நடந்து வந்தேன் - நன்செய் அத்தனையும் சுற்றிப் பார்த்து வந்தேன்; நேயமுறப் புன்செய்க் காட்டிலும் - அங்கங்கு நீரை இறைத்து நெடுக வந்தேன்
கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன் கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்; திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச் சீப்புகள் மோதித் திறந்துவந்தேன்.
காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில் கண்குளிரப் பயிர் கண்டுவந்தேன்! ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென் ஆசை தீரவிளை யாடிவந்தேன்.
பஞ்சை அரைத்துநூல் நூற்றுவந்தேன்-சீனி பாகமாய்ச் செய்து கொடு்த்துவந்தேன்; நெஞ்சம் உலர்ந்த நெடுநகரில்-குழாய் நீராகவும் சென்று பாய்ந்து வந்தேன்.
மாங்கனி தேங்கனி வாரிவந்தேன் - நல்ல வாச மலர்களும் அள்ளி வந்தேன்; தீங்கரும் பாயிரம் தள்ளி வந்தேன் - மிகத் தேனும் தினையுமே சேர்த்து வந்தேன்
அல்லும் பகலும் அலைந்து வந்தேன் - எங்கள் ஆழி இறைவனைக் காண வந்தேன்; நில்லும், எனக்கினி நேரமில்லை - இன்னும் நீண்டவழி போக வேண்டும் அம்மா! நில்லும், எனக்கினி நேரமில்லை - இன்னும் நீண்டவழி போக வேண்டும் அம்மா! (3) |
||||||||
by Swathi on 22 Jul 2018 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|