LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !!

லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான உத்தம வில்லன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. அது மட்டுமல்லாமல், இப்படம் வெளியாவதில் பல்வேறு பிரச்சினைகளும் எழுந்தது. இந்த படம் மூலம் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், இப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக கமல் நடிப்பில் உருவாகி வரும் தூங்காவனம் படத்தின் உரிமையை லிங்குசாமிக்கு அளிக்க கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தூங்காவனம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், கிஷோர், பிரகாஷ் ராஜ், சம்பத், யூகி சேது உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்துக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் கமலிடம் நீண்டகாலமாக இணை இயக்குனராக பணியாற்றிய ராஜேஷ் செல்வம் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

by CinemaNews   on 27 Jul 2015  0 Comments
Tags: Kamal   Lingusamy   Thoonga Vanam   கமல்   லிங்குசாமி   தூங்கா வனம்     
 தொடர்புடையவை-Related Articles
சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!! சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!!
ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!! ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!!
கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !! சத்தமில்லாமல் சாதித்த பாபநாசம் !!
மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !! மீண்டும் இணைகிறதா கமல் - லிங்குசாமி கூட்டணி !!
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.