LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அடுத்த ஆண்டில் மருதநாயகத்தை மீண்டும் துவக்குகிறார் கமல் !!

உலக நாயகன் கமலஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் கடந்த 1997-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த படத்தை அப்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து ராணி எலிசபத் துவங்கி வைத்தார். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்வீரர், முகமது யூசப் கானின் வாழ்க்கையை மையமாக வைத்துதான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமாக தொடங்கிய இந்த படத்தின் படபிடிப்புகள், போதிய நிதி பற்றாக்குறை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த படத்தை மீண்டும் எடுக்க கமல் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்தப் படத்தை இப்போது தயாரிக்க நிச்சயமாக 100 கோடி தேவைப்படும். நான் சொல்வது உண்மையிலேயே 100 கோடி. மருதநாயகம் படத் தயாரிப்புக்கு பணம் மட்டும் ஒரு பொருட்டல்ல. படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க  ஒரு மிகப்பெரிய டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் தேவை. அதற்கான ஆட்கள் வரவேண்டும் என்று கூறியிருந்தார் கமல்.

சமீபகாலமாக நம் நாட்டிலும், தமிழ் திரையுலகத்திலும் ரூ.100 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் படங்கள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. அதன்காரணமாக கமலுக்கும் தனது மருதநாயகம் படத்தை மீண்டும் புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த கமல், மருதநாயகம் படம் 2015ம் ஆண்டு துவங்கும் என்று கூறியிருக்கிறார். மருதநாயகம் படத்தை, லண்டனை சேர்ந்த தொழிலதிபரும், கமலின் நண்பருமான ஒருவர் தயாரிக்க முன்வந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிகின்றன.

by Swathi   on 29 Dec 2014  1 Comments
Tags: Madudhanayagam   Madudhanayagam Movie   Kamal Hasan   கமல் ஹாசன்   மருதநாயகம்        
 தொடர்புடையவை-Related Articles
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !! பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !!
பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !! பிகே தமிழ் ரீமேக் குறித்த கமல்ஹாசனின் பதில்கள் !!
உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !! உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !!
கருத்துகள்
29-Dec-2014 10:32:28 thulasibabub said : Report Abuse
Marudha nayagam eppo thiraiku konndu varuvai vaddhyare..Please
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.