|
|||||
விஸ்வரூபம் - ஒரு ஜோதிடக் கண்ணோட்டம் |
|||||
![]() விஸ்வரூபம் - ஒரு கண்ணோட்டம்
ஜோதிடர் வேல்முருகன் (E-mail:Jothidar@valaiTamil.com) வலைத்தமிழ் மன்றத்தில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு ஒரு வாசகி எழுதிய குறிப்பு : "விஸ்வரூபம் திரைப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்". இந்தக் கருத்தைச் சொன்ன வாசகி ஏதோ ஒரு காரணத்தை வைத்துத் தான் இப்படி சொல்லியிருப்பார். ஜோதிட ரீதியாக இது முற்றிலும் சரி. கமலின் பிறந்த தேதிப்படி சில கோள்களின் நிலைகள் மற்றும் அவற்றோடு இந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதியன்று ஏற்படும் கோள்களின் நிலைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
ஒன்பது கோள்களில் ஒருவருடைய தொழிலை நிர்ணயம் செய்வது ஜீவனகாரகன் எனப்படும் சனி தான். இந்தக் கோள் கமலின் ஜாதகத்தில் உச்சமாக இருக்கிறது. மிகவும் மெதுவாக நகரும் கோள் என்பதாலும் அதிக வலிமையோடு இருப்பதாலும் தொழிலில் நிதானமாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் உயர்ந்த நிலைக்கு முன்னேறி இருக்கிறார் கமல். இவருடைய ஜாதகத்தில் சனியோடு அதே துலா ராசியில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்கிறார்கள். சூரியன் ஒளிதரும் கோள். ஒளி இல்லாமல் திரைப்படம் இல்லை. சூரியன் நீச்சமாக பலமில்லாமல் இருந்தாலும் உச்சம் பெற்ற சனியின் சேர்க்கையால் பலம் பெறுகிறார். இதனால் தான் கடும் முயற்சிகள் செய்த பிறகே அவர் புகழ் பெறுகிறார். புதன் பலதிறமைகளை வெளிப்படுத்தும் கோள். கமலுக்குத் தெரியாத சினிமா சங்கதிகள் இருக்க முடியாது. இதை சனியோடும் சூரியனோடும் சேர்ந்த புதன் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக தெரிவிக்கிறது.
சனி பன்னிரண்டு ராசிகள் கொண்ட நேச்சுரல் சோடியாக் என்று சொல்லப்படும் காலச் சக்கரத்தை ஒரு முழு சுற்று சுற்றி வர சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள் ஆகும். கமல் பிறந்தபோது துலா ராசியில் 19 டிகிரியில் இருந்த சனி இப்போது இத்திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது (கமல் பிறந்த பிறகு இரண்டு சுற்று சுற்றியபின் அதாவது சற்றேறக்குறைய அறுபது வருடங்களுக்குப் பிறகு) அதே ராசியில் 6 டிகிரியில் இருக்கும். இது கமல் அடுத்த தலைமுறையில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை உணர்த்துகிறது. விஸ்வரூபம் ரிலீஸ் ஆகும் நாளில் கோள் சாரத்தில் வக்கிரமாக பயணம் செய்யும் குரு என்னும் சுப கோள் ஒளி தரும் கோள்களான சூரியன் மற்றும் சந்திரனையும், தொழில் நுட்பக் கோளான செவ்வாயையும், பலநோக்குத் திறன் கொண்ட புதனையும், சுக்கிரன் என்னும் சினிமா கலைத் துறை கோளையும், சனி என்னும் தொழில் காரக கோளையும், மிகவும் வலிமையையும், குற்றச் செயல்களையும், அயல்நாட்டுத் தொடர்புகளையும் குறிக்கும் ராகுவையும் பார்க்கிறார். அது மட்டுமில்லாமல் கிரைம் எனப்படும் கெடுதல் தன்மை கொண்ட கேதுவோடு சேர்ந்திருக்கிறார். இதை ஒரு வரியில் சொல்வதாக இருந்தால் ஒரு கோள் அதுவும் சுபத் தன்மை கொண்ட குரு என்னும் கோள் ஒரே நேரத்தில் அனைத்து கோள்களோடும் ஜோதிட ரீதியாக தொடர்பு கொள்வது ஒரு அபூர்வ நிகழ்வாகும். விஸ்வரூபம் ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம் என்பதும் இது ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் திரைப்படம் என்பதும் நிச்சயம் என்று கோள்கள் சூசகமாக குறிப்பிடுகின்றன.
கமலின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் குருவின் மிகச் சரியான பாகையை 2012 அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கோள் சார சனி பார்ப்பதாலும், கமலின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் சனியின் பாகையை கோள் சார குரு பார்ப்பதாலும், இந்தத் திரைப்படம் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய புகழையும் உலகளாவிய பெயரையும் தரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
விஸ்வரூபம் - கமல் ஹாசனின் உண்மையான ரூபம் மாபெரும் திறமைகள் கொண்ட ஒரு கலைஞனின் ரூபம். கமலுக்கு நிகர் கமல் தான். நிச்சயமாக வேறொருவர் இல்லை. |
|||||
by Swathi on 31 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|