|
||||||||
காமன் பண்டிகை |
||||||||
இணைய நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!!
காமன் விழா/பண்டிகையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் ’காமன்’ அதாவது ’மன்மதனைப்’ பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு மன்மதனென்று நான் குறிப்பிட்டது பீப்பாடல் புகழ் நடிகர் அன்று; தேவர்களுள் ஒருவரான காமதேவன் ஆவார். இன்னும் சரியாகச் சொன்னால் ரதியின் கணவர்; திரைப்படங்களில் தலைவன் அல்லது தலைவி மீது காம பாணமெய்து, அவர்களிருவருக்கும் இடையில் காதல் மலரச் செய்வாரே அவர்தான் ’காமன்’.
சிவபெருமானின் தவத்தை கலைக்கும் பொருட்டு பார்வதிதேவியால் அனுப்பப்பட்ட மன்மதன் தன்னிடமிருந்த காமக்கணையை அவரை நோக்கித் தொடுப்பார். தனது தவத்தைக் கலைத்ததால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார். இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரண்டு, தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டினாள். கோபம் தணிந்த சிவன் ரதியின் நிலையைப் புரிந்து அவள் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். பின்னர் மன்மதன் உயிர்த்தெழுந்து சிவபெருமானை வழிபடுதலே காமன் பண்டிகையாகும். |
||||||||
by varun on 04 Nov 2016 0 Comments | ||||||||
Tags: காமன் பண்டிகை Kaman Pandigai | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|