LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

காமராஜரின் கண்ணியம் !!

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை. அதானல் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வற்றி பெற்றாக வேண்டும். போட்டியிட வேண்டியதில்லை. எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக்கொள்ளலாம் என்று பலரும் கூறினார்கள். அதை ஏற்கவில்லை. மக்களிடம் வாக்குகளை பெற்றே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்கிறார். பட்டென்று என் தொகுதியில் போட்டியிடுங்கள், நான் பதவி விலகுகிறேன் என்கிறார் அருணாச்சலம். இடைத்தேர்தல் நடந்தது.


அதன்படி அவருக்கு தொடர்பே இல்லாதா குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோதண்டராமன் என்ற தோழர் போட்டியிடுகிறார். கடுமையான பிரச்சாரம் நடக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ‘மேம்பாலம்’ கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைக்கிறார்கள். காமராஜர் முதல்வர். பதவியில் இருக்கிறார். சரி என்று கூறியிருந்தால் மொத்த வாக்காளர்களும் ஓட்டு போட்டிருப்பார்கள்.. ஆனால் அப்படி செய்யவில்லை. அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டு வருகிறார்.


உடனிருந்தவர்கள் ‘என்ன ஐயா. கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று ஒரு வார்த்தை கூறியிருக்க கூடாதா. கோரிக்கை நியாயமானதும்கூட. எல்லோரும் ஓட்டு போட்டிருப்பார்களே’ என்று குறைபட்டுக்கொண்ட போது,....“ அது தப்பு. மக்கள் வைத்த கோரிக்கை நியாயமானதுதான். அதை தேர்தலுக்கு பிறகு செய்துகொடுத்துட வேண்டியதுதான். ஆனால் அதை சொல்லி ஓட்டு கேட்ககூடாது. நான் அப்படி கேட்டால் எதிர்கட்சி வேட்பாளர் கோதண்டம் என்ன சொல்லி ஓட்டு கேட்பார். அவரிடம் அதிகாரமில்லையே. நான் அதிகாரத்தை துஷபிரயோகம் செய்வதாகதானே அமையும். இது எப்படி ஜனநாயகமாகும்.” என்று கூறி மறுத்தே விட்டார்.


இன்றைய அரசியல் அப்படி இருக்கிறதா. எத்தனை அறிவிப்புகள். எத்தனை இலவசங்கள். தாங்கள் சேர்த்த சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள அதிகாரம் என்ற பூதம் வேண்டும். மக்கள் நிராகரித்தால்...? என்ன செய்வது. தோற்றுவிட்டால் என்ன செய்வது? என்ற அச்சம். அந்த அச்சம் இலவச அறிவிப்புகளை, திட்டங்களை அறிவிக்கச் சொல்கிறது.

by Swathi   on 05 Nov 2014  1 Comments
Tags: கர்மவீரர் காமராஜர்   Kamaraj   Karmaveerar Kamaraj   Kamarajar           
 தொடர்புடையவை-Related Articles
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
டிஜிடல் தொழில்நுட்பத்தில், புதிய காட்சிகளுடனும் மீண்டும் வெளியாகிறது காமராஜ் திரைப்படம் !! டிஜிடல் தொழில்நுட்பத்தில், புதிய காட்சிகளுடனும் மீண்டும் வெளியாகிறது காமராஜ் திரைப்படம் !!
கருத்துகள்
12-Jul-2019 13:42:47 Kamaraj said : Report Abuse
Kamaraj the most important guy to built india
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.