LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

கந்தரகோலம் என்ற சொல்லின் பொருள் !!

தீவிரமாக ஆராய்ந்ததில் மூன்று வகையான பொருள் சாத்தியங்கள் உள்ளன. எது சரியாக இருக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

(1). கந்தர்வம் என்றால் ‘தலைவனும் தலைவியும் தாமே மணந்துகொள்ளுதல்’. தன்னிச்சைப்படி முன்பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களாக ‘கந்தர்வகோலத்தில்’ நிற்பது. இது மருவி ‘கந்தரகோலம்’ ஆகியிருக்கலாம்.

(2). களத்தில் மாடுகள், யானைகள் கொண்டு மிதித்தபின் நெற்கதிர்களைக் கோல்கொண்டு அடிப்பதற்குக் ‘கந்தடித்தல்’ என்று பெயர். இதில் ‘கந்து’ என்பது தானியம் உதிரும் முன்னுள்ள முற்றிய நெற்பயிர். வைக்கோலுக்கு முந்திய நிலை. அரைகுறையாய் மணியுதிர்ந்து வைக்கப்பட்ட நிலையைக் ‘கந்து அரைக்கோலம்’ என்று சொல்லப்போய் ‘கந்தரைகோலம்’ என்றாகி ‘கந்தரகோலம்’ ஆகியிருக்கலாம்.

(3). திறம் வளம் களம் போன்றவை கடைசியெழுத்து மாறித் தோன்றி திறன் வளன் களன் என்று கடைப்போலிகளாகும். பந்தல் என்பது பந்தர் என்று கடைப்போலி ஆவதுபோல் கந்தல் என்பது கந்தர் என்று கடைப்போலி பெறும். கந்தல் என்பதற்குக் கிழிந்த ஆடை, அறியாமல் விளையும் குற்றம், ஒழுக்கக்கேடு போன்றன பொருள்கள். கந்தல் என்பதை அறியாமல் விளைந்த குற்றம் எனப் பொருள்கொண்டு கடைப்போலி பெற்றால் கந்தர் என்றாகும். அறியாமல் போட்டுக் குழப்பிக் கெடுத்து வைத்த தோற்றம்தான் கந்தர்கோலம், கந்தரகோலம்.

இதற்கும் முருகராகிய கந்தர்க்கும் எந்தத் தொடுப்பும் இருப்பதாய்த் தெரியவில்லை. இம்மூன்றில் எது பொருத்தம் என்று அவரவரே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
03-Feb-2020 11:37:20 ரவி கோவிந்தராசன் said : Report Abuse
உங்களது இரண்டாவது மூன்றாவது விளக்கமே சரியானதாகும். முதலான விளக்கத்தில் வரும் கந்தர்வர்கள் என்போர் ஒரு வகை இந்திய ஆதி குடி இனத்தவர் ஆவர்கள். இவர்களை சமஸ்கிருதத்தில் யௌவனர்கள் அல்லது யவணர்கள் என்று குறிப்பிடுவர். இவர்கள் தமிழ் நாட்டிலுள்ள தோடர்கள், நாகர்கள் போன்ற ஆதி வாசிகள் ஆவர்.இவர்கள் தமிழ்நாட்டின் நாஞ்சில் நாட்டின் ஆதி குடி ஆவார்கள். இன்று சொல்லப்படுகின்ற யூதர்கள், யாசித்தியர்கள் மற்றும் ஆர்மீனியர்கள் எல்லாரும் இந்த யவனர்கள் குடியை சார்ந்தவர்கள். இவர்கள் யுத்த கலையில் வல்லவர்கள். இவர்கள் வழி வந்தவர்கள் தான் சீனர்களும் ஆவார்கள்.அதனால் தான் அவர்கள் யுவான் என்று பெயர் கொண்டுள்ளனர். தமிழர்கள் வழிபாட்டிலுள்ள ஐயனாரை இவர்கள் யேஹுதா, ஜோஷுவா மற்றும் அனுநாகி (அனோகி என்றால் சிவனின் பல உருவம்) உலகையே ஆண்டு தமிழ் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு சென்ற ஆதி குடிகளில் கந்தர்வர்கள் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளனர். கேரளாவில் உள்ள கலரி, தெய்யம் போன்ற தமிழ் கலைகளுக்கு இவர்கள் தான் மூதாதையர்கள்.
 
18-Aug-2016 00:17:55 முத்துச்செல்வம் .ச said : Report Abuse
மிகவும் நன்று
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.