பருவ மழை பொய்த்து விட்டதாலும், வறட்சியின் காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காரைக்குடி முத்துபட்டினத்தை சேர்ந்த இளைஞர் சிவபாண்டியன் தான் படித்த பொறியியல் படிப்பிற்கேற்ற வேலையை தேடாமல் விவசாயத்தில் கால்பதித்துளார். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கடந்த 2010 ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வேலைக்காக வெளிநாடுகளுக்கு பறக்காமல், தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டார். தான் பெற்ற பொறியியல் கல்வியின் காரணமாக, விவசாய துறையில் பயன்படுத்தும் பல்வேறு புதிய இயந்திரங்ககளை கையாள முடிவதாக அவர் தெரிவித்தார். மேலும் இயற்கை உரத்துக்கு முன்னுரிமை கொடுத்து, மாட்டுச்சாணம், மண்புழு உரம் ஆகியவற்றை மட்டுமே போட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
|