LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- பாரதிதாசன் கவிதைகள்

கருத்துரைப் பாட்டு

2.19. தலைவன் கூற்று


(வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலவன், தன் தேர்ப்பாகனை 

நோக்கி, `இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து நாளைக்கே 

தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து' என்று கூறுவது.)


நாமின்று சென்று நாளையே வருவோம்;

வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்;

இளம்பிறை போல்அதன் விளங்கொளி உருளை

விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்

காற்றைப் போலக் கடிது மீள்வோம்;

வளயல் நிறைந்த கையுடை

இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே.


(குறுந்தொகை 189--ஆம் பாடல். மதுரை ஈழத்துப் பூதன்றேவன் அருளியது.)2.20. தலைவி கூற்று


(தலைவனை நினைத்துத் தான் துயிலாதிருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.)


ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்தைக்

கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்

சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை

எண்ணித் துயில்நீங் கியஎன்

கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே!


(குறுந்தொகை 186--ஆம் பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது.)2.21. தோழி கூற்று


(தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே 

வந்து நிற்கிறான்.அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி: 

"தலைவன் நட்பினால் உன்தோள் வாடினாலும் உன் அன்பை அது குறைத்துவிடவில்லை" 

என்று.) 


மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில்

இரவில் முழங்கிக் கருமுகில் பொழிய,

ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம்

அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற-

நாடனது நட்புநின் தோளை

வாடச் செய்யினும் அன்பைமாய்க் காதே!2.22 கதவு பேசுமா?


காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்

ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்

தெருக்கதவில் ஊன்றினான். "திறந்தேன்" என்றோர்சொல்

வரக்கேட்டான். ஆஆ! மரக்கதவும் பேசுமோ?

"என்ன புதுமை" எனஏங்க, மறுநொடியில்

சின்னக் கதவு திறந்த ஒலியோடு

தன்னருமைக் காதலியின் தாவுமலர்க் கைநுகர்ந்தான்!

புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான். "என்னேடி

தட்டுமுன்பு தாழ்திறந்து விட்டாயே" என்றுரைத்தான்.

விட்டுப் பிரியாதார் மேவும்ஒரு பெண்நான்

பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை, தெருவில்

கருமரத்தாற் செய்த கதவு.

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கவி துளிகள் கவி துளிகள்
நீரோடை நீரோடை
கல்வி என்று எதைச்சொல்ல கல்வி என்று எதைச்சொல்ல
இயற்கை அழகான கொடியவன் இயற்கை அழகான கொடியவன்
அம்மாவும் பிள்ளைகளும் அம்மாவும் பிள்ளைகளும்
கடலும் கரையும் கடலும் கரையும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.