|
|||||
தமிழகத்தின் இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரியப் பல்லுயிர் தளமாகிறது காசம் பட்டி |
|||||
![]()
மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியப் பல்லுயிர் தளமாக 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம் பட்டி கிராமத்தில் உள்ள 12 ஏக்கர் பரப்பை 2 ஆவது பாதுகாக்கப்பட்ட பாரம்பரியப் பல்லுயிர் தளமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், அழகர்கோவில் வனச்சரகத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் களாக்காய், சிறிய ஆமணக்கு உள்பட 22 வகையான புதர்ச் செடிகள், அழிஞ்சி, இரும்புளி, பூந்திக்கொட்டை மரம் உள்பட 48 வகையான மரவகை, ஓணான் கொடி, ஓடான் கோடி, வக்கனத்தி உள்பட 21 வகையான கொடிகள், சிறுகுறுஞ்சான், நன்னாரி, ஓரிதழ்த் தாமரை உள்பட 29 வகையான குறுஞ்செடிகள் உள்ளன.
மேலும், வால் காக்கை, நீலத் தொண்டை ஈ பிடிப்பான், தேன் சிட்டு உள்பட 12 வகையான பறவை இனங்கள், சிறிய அளவிலான பாலூட்டி விலங்குகள், ஊர்வன, பூச்சிகளின் வாழ்விடமாக உள்ளது.
|
|||||
by hemavathi on 29 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|