|
|||||
கஸ்டர்ட் ரசமலாய் |
|||||
தேவையானவை : பால் - 1 1/2 லிட்டர் கஸ்டர்ட் (வெந்நிலா ப்ளேவர்) -4 ஸ்பூன் சீனி- 1 கப் ஏலக்காய் பொடி- 1/4 ஸ்பூன் முந்திரி-10 வினிகர்- 2 ஸ்பூன் தேங்காய்- ஒரு சில்லு பாதாம்- 5 (உறவைத்தது)
செய்முறை: 1.முதலில் ஒரு லிட்டர் பாலை தண்ணீர் விடாமல் காய்ச்சி சுண்டியதும் வினிகரை விட்டு திரிய விடவும். 2.திரிந்த பாலை வடிகட்டி, நீரில்லாமல் கட்டியாக எடுக்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்கு பிசையவும் பின்னர் உருண்டைகளாக எடுத்து தட்டிக்கொள்ளவும். 3.அரை லிட்டர் பாலை தனியாக சர்க்கரை,ஏலப்பொடி விட்டு காய்ச்சவும். குளிர்ந்த பாலில் கலக்கிய கஸ்டர்டை பாலில் போட்டு அடியில் பிடிக்காமல் கிண்டவும். 4.பின்னர் தட்டிய பனீரை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். நறுக்கிய முந்திரி,பாதம், தேங்காய் சேர்க்கவும். 5.5 - 10 நிமிடங்கள் வைத்து பின்னர் இறக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த பின் பரிமாறவும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|