LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

காட்டில் ஒரு வழக்கு

""ஐய்யோ... அம்மா'' அப்படீண்ணு யாரோ அலறதைக் கேட்டு பறவைகள் திடுக்கிட்டுச்சு. சத்தம் கேட்ட திசையைப் பார்த்து வேகம் வேகமாப் பறந்தது. அங்கே ஒரு ஆந்தை வயிற்றைப் பிடிச்சபடி வலியல் துடிச்சுகிட்டு இருந்தது. அதைப் பார்த்த ஆந்தையோடு நெருங்கிய நண்பன் காகம் ஓடிப்போய் ஆந்தையோட முதுக தடவிக் கொடுத்தது. "என்ன நடந்திச்சு? எப்படி வயிற்று வலி வந்திச்சு?'" அப்படீண்ணு அன்பா விசாரித்தது.

 

"ஏதோ ஒண்ணு என் வயிற்றில் வந்து மோதியது, அவ்வளவுதான் எனக்குத் தெரியும். வேற ஒன்றும் எனக்குத் தெரியாது.... ஐயோ உயிர் போகுதே?'' ஆந்தை மறுபடியும் வயித்துப் பிடிச்சுகிட்டு அழத் தொடங்கியது. காகம் ஆந்தையைக் கூட்டிகிட்டு வைத்தியரிடம் போனது. காட்டு வைத்தியரான குயில் அதோட வீட்டில் ஏதோ பச்சிலைகளைப் பிழிஞ்சு சாறு எடுத்துகிட்டிருந்தது.

 

'"வைத்தியரே.. .வைத்தியரே.. என் நண்பன் வயித்துவலியால துடிக்கிறான். காப்பாத்துங்க காப்பாத்துங்க..'' ண்ணு கத்தியது காகம்.

 

செஞ்சுகிட்டிருந்த வேலையை அப்படியை விட்டுட்டு குயில் எழுந்து வந்தது. ஆந்தையைப் பரிசோதிச்சுப் பாத்தது.

 

"என்ன சாப்பிடக்கூடாததை ஏதையாச்சும் சாப்பிட்டியா?'' அப்படீண்ணு ஆந்தைகிட்டே கேட்டது.

 

"நான் எதுவும் சாப்பிடவில்லை... ஏதோ ஒன்று என் வயிற்றின் மேலே வந்து மேதியது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஐயோ வலி உயிர் போகுது... வேகமா எதாவது பண்ணுங்க வைத்தியரே'' ஆந்தை ஆழாத குறையாக கேட்டது.

 

குயில் வைத்தியர் ஆந்தையோட வயிற்றை கூர்ந்து கவனிச்சாரு, தொட்டுப் பாத்தாரு. அவருக்கு விஷயம் புரிஞ்சிருந்தது.

 

யாரோ ஒரு பையன் களிமண் உருண்டையை வைத்து ஆந்தையைக் குறிபார்த்து விட்டிருக்கான் அது வயித்தில் இருக்கு. அதனால் நான் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டுங்குங்க. ஆந்தையை மாங்குளத்துக்குக் கூட்டிட்டுபோ. அந்தக் குளத்தில் கழுத்து மட்டும் வெளியே தெரியற மாதிரி ஒரு நாள் முழுக்க ஆந்தை தண்ணீரில் நிக்கட்டும். வயிற்றுவலி சரியாயிடும்ணு சொல்லிட்டு மறுபடியும் மூலிகையைப் பிழியத் தொடங்கிச்சு குயில் வைத்தியர்.

 

காகம் ஆந்தையைக் கைத்தாங்கலா மாங்குளத்துக்குக் கூட்டிட்டுப் போச்சு. ஆந்தையைத் தண்ணீரில் இறங்கி நிற்கவைத்தது. காகம் ஆந்தைக்கு உணவு கொண்டு வரப் போனது.

 

நேரம் ஆக ஆக களிமண் உருண்டை மெல்ல மெல்ல தண்ணீரில் கரையத் தொடங்கிச்சு. ஒருநாளாச்சு. ஆந்தை தண்ணீரிருந்த தாவி வெளியே வந்திச்சு. ஆகா... என்ன ஆச்சரியம் வயிற்று வலி சூரியனைக் கண்ட பனிபோல மாயமாய் மறஞ்சு போயிருச்சே அப்படீண்ணுட்டு விர்ணு மேலே பறந்துச்சு. சர்ணு கீழே ஏறங்கிச்சு. சிறகை அசைக்காம வானத்தில் மிதந்தது. மகிழ்ச்சியில் கத்தியது.

 

ஆந்தை மகிழ்ச்சியா பறக்லிறது பார்த்திட்டு இரண்டு பேர் அங்கே வந்தாங்க. ஆந்தை அவர்களைப் பார்த்ததும் கீழே இறங்கி வந்திச்சு. என்ன ஆந்தையாரே வயித்து வலியெல்லாம் குணமாயிருச்சா? குயில் வைத்தியர் சிரிச்சுகிட்டே கேட்டாரு.

 

ஒ போயே போயிருச்சு ஆந்தை மகிழ்ச்சியாக் சொல்லிச்சு.

 

"சரி என் வைத்தியத்துக்குத் தரவேண்டிய கட்டணத்த தா" அப்படீண்ணு குயில் கேட்டுச்சு.

 

"கட்டணமா? எதுக்கு? தண்ணீர் தானே என் வயிற்று வலியைக் குணமாக்கிச்சு.

 

நீங்க ஒண்ணும் செய்ய வில்லையே பிறகு எதுக்குக் கட்டணம் கேட்கறீங்க?'' ஆந்தை கேலியா கேட்டது.

 

குயில் வைத்தியருக்கு ஒரே வருத்தமாப் போயிருச்சு. அது பரிதாபமா காகத்தைப் பார்த்துச்சு. அதை கவனிச்ச ஆந்தை... "என்ன பார்க்கறீங்க, நீங்க என்ன காட்டுக்குப் போனீங்களா, மூலிகை பறிச்சீங்களா, சாறு பிழிஞ்சீங்களா? எதற்காக உங்களுக்குதக் தரணும் கட்டணம் அப்படீண்ணு கோபமா கேட்டுச்சு.

ஆந்தை சொன்னதக் கேட்டு காகமும் வாயடைச்சுப் போச்சு.

 

"ம்ம்.. அப்படியா சொல்றே... நான் காட்டு நீதிமன்றத்திலே வழக்குப் போடப் போறேன்" என்றபடி குயில் விருட்டுண்ணு பறந்து போச்சு.

"வழக்குப் போடறதுண்ணு போடட்டும். நீதிமன்றத்திலே பார்த்துக்கலாம்'" அப்படீண்ணு சொல்லிட்டு ஆந்தையும் பறந்து போச்சு.

 

அடுத்தநாள் காட்டு நீதி மன்றம் கூடியது. விலங்குகளும் பறவைகளும் நீதி மன்றத்துக்கு முன்னால் கூடியிருந்தாங்க. நீதிபதி முயல் வந்தார். எல்லாரும் எழுந்து நின்று நீதிபதிக்கு மரியாதை செலுத்தினாங்க. முயல் நீதிபதி உயரமான இருக்கையில் உட்கார்ந்தாரு. அவர் உட்கார்ந்ததும் எல்லாரும் அவங்கவங்க இடத்தில் உட்கார்ந்தாங்க.

 

நீதிபதி முதலில் ஆந்தையைக் கூப்பிட்டாரு. ஆந்தை நடந்ததையெல்லாம் ஒண்ணுவிடாம சொல்லிச்சு.

 

என்னோட வயிற்று வலிக்கு மருந்தா இருந்தது தண்ணீர் தான். குயில் எதுவும் செய்ய வில்லை. அதனால் குயில் வைத்தியருக்குக் கட்டணம்

கொடுக்கத் தேவையில்லைண்ணு தீர்ப்பளிக்கணும்ணு கணம் நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் சொல்லியது.

 

அடுத்ததாக குயில் தன்னோட வாதத்தை முன் வைத்தது. எல்லா நோய்க்கும் மருந்து கொடுத்துத்தான் குணப்படுத்துணும்ணு எந்த வைத்திய புத்தகத்திலையும் சொல்லப்படவில்லை. சில நேரங்களில் அறிவுரை சொல்றதும் மருந்தாகும். என ஆந்தை எனக்குக் கட்டணம் தரணும்ணு தீர்ப்பு வழங்கணும்ணு கேட்டது.

 

இரண்டு பேரோட வாதங்களையும் கூர்ந்து கேட்ட முயல் நீதிபதி தீர்ப்பு வழங்கினாரு.

 

குயிலோட வாதத்தை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுது. எனவே ஆந்தைக் குயிலுக்குக் கட்டணம்கொடுத்தேயாக வேண்டும். ஆந்தை கட்டணம் கொடுக்க மறுத்தா ஆந்தையை வைத்தியருகிட்ட கூட்டிட்டுப் போன காகம் குயிலுக்குக் கட்டணம் கொடுக்கணும் இதுதான் தீர்ப்பு அப்படீண்ணு முயல் நீதிபதி எழுந்தாரு.

 

ஐய்யோ... நீதிபதி அவர்களே கொஞ்சம் பொறுங்க...'' அப்படீண்ணு சொல்லிட்டு காகம் பேசத் தொடங்கிச்சு.

 

"நானோ பரம ஏழை. அங்கும் இங்கும் பறந்து போய் எச்சில்களைத் திண்ணு வாழ்ந்திட்டிருக்கேன். என்னால் எப்படிக் கட்டணம் கட்ட முடியும்.? அப்படீண்ணு சொல்லியது. காகம் பேசுறதை கேட்ட குயிலு... "காக்கையாரே, எனக்கு மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடிக்கணும் புதுப்புது மருந்துக தயாரிக்கணும், அதனால் அடையிருந்து குஞ்சு பொரிக்கவோ, குஞ்சுகளுக்குத் தீனி கொடுத்து வளக்கவோ நேரமில்லை.

 

அதனால் நான் உன்னோட கூட்டில் முட்டைபோடறேன். நீ அடைகாத்து குஞ்சு பொரிச்சு குஞ்சுகளைக் கவனிக்கணும். இதுக்கு நீ ஒத்துகிட்ட கட்டணம் தர வேண்டாம்.'' அப்படீண்ணு சொல்லிச்சு.

 

காகமும் அதுக்கு ஒத்துகொண்டது. காகமும் காகத்தோட நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து நன்றி மறந்த ஆந்தையைக் கொத்தி விரட்டியது. அன்றையிலிருந்து

குயில் காக்கையோட கூட்டில் முட்டைபோடத் தொடங்கிச்சு. காக்கைககளோட தாக்குதலுக்குப் பயந்துகிட்டு ஆந்தை பகலில்

தலைகாட்டாமல் எங்கேயாவது மறைந்திருக்கத் தொடங்கியது.

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.