LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை)

...வாடும்போது
ரசித்துவிட்டு
வளர்ந்தவற்றை
ருசித்திடத்தான்
மாண்புமிகுப்
பருவமழை
கடலூர்-வடலூரென
வருடத்திலே
வந்திடும்!

 

....கண்கள்மூடி
கரையும்போது
மண்ணில்
சொர்க்கம்
ஏதுகின்ற
கவிஞர்வாழும்
நானிலம்!

....கதவடைத்து
வைக்கும் போதும்
கூரைவாசி
வீடுதேடி
உள் நுழைந்து
உயிர் குடிக்கும்
வெள்ளக்காட்சி
ஓடிடும்!

....உச்சி மீது
வானிறைய
அச்சமின்றி
ஆடிப்பாட
அன்றாடங்க்
காய்ச்சிக்கிங்கே
வழியிருந்தால்
கூறவும்!

....குற்றம் யாரை
சொல்வதிங்கே
சுற்றம் யாவும்
இழந்துவிட்டு
அகதியாகும்
பிஞ்சுக்குத்தான்
யாரு இங்கே
காரணம்?

...பருவப்புயல்
வீசும் போதும்
கரையை அது
கடக்கும் போதும்
பஞ்ச பூத
ஜந்து கூட
தோற்றுப்போகும்
மழையிடம்!

...கையசைப்பைக்
காட்டிவிட்டு
கண்ணீரினை
இயம்பிவிட்டு
கடல்கடந்து
போனவர்கள்
கண்களிலே
மறையலாம்!

....தழுதழுத்தக்
குரலிலேதான்
தடுக்க முடியா
நிலையிலேதான்
அடித்துச்செல்லக்
கண்கள் முன்னே
வெடுக்கெனவே
பிடுங்கிவிட்டார்
உயிர்களைத்தான்
கடவுளாம்!

-சிவசங்கர் கருப்பையா

by Sivasankar   on 16 Nov 2015  1 Comments
Tags: இரங்கல் கவிதை   மழை கவிதை   மாமழை   மாமழைப் போற்றதும்   Mazhai Kavithai   Rain Kavithai   Rain Tamil Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன் மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன்
மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை) மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை)
மழைச் சுவடுகள்...வித்யாசாகர்! மழைச் சுவடுகள்...வித்யாசாகர்!
மழை - தண்மதி மழை - தண்மதி
மழை அறிவிப்பு மழை அறிவிப்பு
கருத்துகள்
18-Nov-2015 04:01:01 Visa said : Report Abuse
உண்மை. உருக்கமான கவிதை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.